அடுத்த நாள் விடியல் அழகானதாகவே இருந்தது.....வைஷு எழுந்து கிச்சன் வந்து டீ குடித்துக்கொண்டு இருந்தாள் வள்ளி வேலையில் மூழ்கிக்கிடந்தாள்.... பூனை நடையில் அப்பாவை தேடி தோட்டத்துக்கு சென்றாள்
வைஷுவை கண்டதும் "குட் மோர்னிங் லிட்டுல் பியூட்டி என்றார்..." அவர் அப்படி சொன்னதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு
"அப்போ நான் உங்களுக்கு லிட்டுல் பியூட்டி தானா ஆமா எனக்கு முன்னாடி இருக்குற பியூட்டி யாரு?" என்று கோவமாக கேட்டதும்
"உங்கம்மா வள்ளியும் உன் அக்கா விதுவும் தான்மா" என்றார் அப்படியே சிரித்து கொண்டு
"அப்படின்னா சூப்பர்ப்பா.... அப்பா உங்க கிட்ட தனியா பேசனும்" என்றாள் கிசுகிசுப்பாய்"ஏன்ம்மா இப்ப நான் கூட்டத்தோடயா இருக்கேன் தனியா தானே இருக்கேன் சொல்லுமா?" என்றார் பொய்யாக சுற்றி பார்த்து விட்டு
"உங்களுக்கு வாய்கொழுப்பு ஜாஸ்த்தி" என்றதும் வெடித்தூ சிரித்து விட்டார் தந்தை சுதந்திரமாக தன்னை மறந்து சிரிப்பதூ அவ்வளவு அழகு...... அதை ரசித்தவள் வேல் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டதும்
"அப்பா எக்சுவலி எனக்கு எல்லாமே தெரியும்" என்றாள் வெடுக்கென"அட என் பொண்ணுங்க எப்பவும் ஜீனியஸ் தானே எல்லாம் தெரியுறதுல சந்தேகம் எதுவுமில்லையே " என்றார் நக்கலாக
"ஆஹா.... காமெடி.... போங்கப்பா இது சீரியஸ்" என்று விட்டு கூர்மையாக அவர் கண்களை பார்த்து "அப்பா அந்த ரேக்கா மேட்டர்....., உங்க பாஸ்ட்..., அக்காவோட பிறப்பு....,அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையில் இருந்த பிரிவு.... எக்செக்ட்ரா... எக்செக்ட்ரா...." என்றாள் நுனுக்கமாக அவரை பார்த்தூ
அவ்வளவு தான் வேல் இமை அசைக்காது அப்படியே பெப்பரபேன்னு நின்றார்.... அவர் அதிர்ச்சியில் இருப்பதை கண்ட வைஷு
"அப்பா" என்று கத்திவிட்டு அவரது தோலை பிடித்து ஆட்டினாள்
"ஹாம்..." என்று கூறிக்கொண்டே அதிர்ச்சியை விட்டு மீண்டார்.....
YOU ARE READING
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
General Fictionஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...