என் காதல்-13

3.6K 147 16
                                    

மதுரையிலிருந்து சென்னை வரை தானே காரில் கூட்டிச்செல்வதாக வேல் கூறியும்...

"இல்லப்பா... இதுவரை நான் தனியா ட்ரைன்ல போனதே இல்ல ஸோ நான் போர்கிறேன் ப்ளீஸ்ப்பா" என்று கேட்டதும் சரி போய்டு வாடா என்று விட்டார்...
"பட் ஸ்டேஷன் வரை வந்து உன்ன ட்ரைன்ல ஏத்தி விட்றேன்"

சரிப்பா என்றதால் அதன்படி அவன் ரயில்வே ஸ்டேஷன் வந்து அவள் ஸீட்டில் அமரும் வரை நின்றான்

"அப்பா போனதும் கால் பன்றேன்ப்பா நீ வொர்ரி பன்னிக்காத...."

"சரிடா தங்கம் முதல் தடவை உன்ன பிரியிறேன் கத்தி அழுகனும் போல இருக்குடா?"

"அழுவாதப்பா.... அதான் மொபைல் இருக்குல டய்லி கால் பன்றேன்.... அப்பப்போ வீடியோ கால் பன்றேன் நீ பிஸ்னஸ் மீட்டீங்க்கு சென்னை வந்தா பார்க்கலாம் லீவ் விட்டா நானே வர்றேன் சரியா?" என்று கூரி ஜன்னலுக்கு வெளியே கை போட்டு வேலின் தலையை தடவினாள்....
அந்த கையை எடுத்து முத்தமிட்டான் வேல்

"என்ன ப்ராப்ளம் ஆக இருந்தாளும் அப்பாக்கு சொல்லுடா நல்லா படி...." என்று கூறி கையை விட்டார்..... சற்று நேரத்தில் ட்ரைன் கிளம்பியதும்.... வேலி வீட்டுக்கு சென்று விட்டான்

விது பக்கத்தில் ஒரு பெண் இருந்தாள் முப்பது வயது இருக்கும் ... அவள் அருகில் அவளது கணவனும் இருந்தார் மடியில் ஒரு குட்டி பெண் வித்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நின்றாள்....

வித்யாவிற்கு முன் ஸீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்து நின்றான் அவன் பார்க்க நல்ல நிறமாகவும் அப்பாவியான முகஜாடையுமாக இருந்தது ஒரு 24 வயது தான் இருக்கும்....

கொஞ்சம் நேரம் சுற்றி சுற்றி பாரத்தாள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்...

வித்யாவிற்கு அப்பா அம்மா வைஷு ஞாபகம் வந்து விட்டதும் மூடி இருந்த கண்களிற்கு இடையில் கண்ணீர் வடிந்தது
வீட்டுக்கு கால் செய்தாள்...

வைஷு ஆன்ஸ்வர் செய்தாள்...

"வைஷு எனக்கு போகவே பிடிக்கல  நான் வண்டலூர்ல இறங்கிக்க போறேன்... டி பயமா இருக்குடி" எனறு அழுதாள்....

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now