என் காதல்-50

4.4K 177 31
                                    

அன்று இரவாகும் வரை சென்னையிலே தங்கி விட்டு இரவு மதுரைக்கு கிளம்பினர்.....

போகும் வழியில் ரித்திக்கா வீடியோவை பார்த்து விட்டு கால் செய்து அழுதாள்

"அக்கா நீங்க பக்கத்துல இருந்தா கால்ல விழுந்து இருப்பேன்.... ஒரு பொண்ணு நானே என் அக்கா வாழ்க்கைய அழிச்சிட்டேன் அத மனசுல வெச்சிக்காம எனக்கு என் தகுதிக்கு மேலான ஒருத்தர கல்யாணம் பன்னியும் கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றிக்கா" என்றாள் அவளுடன் பேசிவிட்டு மொபைலை ச்விச் ஆப் செய்து விட்டாள்

முன் சீட்டில் அவளும் ஆதியும் பின்னே வேலும் வள்ளியும் அடுத்த காரில் கார்த்திக் அவனது குடும்பத்துடன் மகேஷ்ஷடன் அனுவும் சூர்யாவுடன் வைஷு என்று அவர் அவர் காரில் வந்தனர்....

வீட்டை அடைந்ததும் உறக்கமே கண் என்று அனைவரும் தூங்க சென்றனர்
ஆதி அவனது அறைக்கும் விது அவளது அறைக்கும் நுளைந்தனர் அதை கவனிக்கவும் முடியாத அளவு மற்றவர்கள் டய்ர்ட்டாக இருந்தனர்

விது அறைக்குள் சென்று குளித்து நர்மலான கட்டன் சாரிக்கு மாறிய பின்பே ஆதி வரவில்லை என்பதை கவனித்தாள்

'அவன் யேன் வரலை நானா போய் கூப்பிட்டா நல்லா இருக்காது என்ன பன்றது' என்று புரியாமல் பெல்கனியில் சாய்ந்தாள் இதே சங்கடத்துடன் ஆதியும் பெல்கனிக்கு வந்தான் வித்யாவை கண்டதும்

"வித்யா வட் ஹெப்பன்ட் தூங்கலையா?"என்று கேட்டுக்கொண்டே அவளருகில் வந்தான்

அவள் எதுவும் பேசாது நிக்கவும் நெருங்கி வந்து அவளது ஷோல்டரை தொட்டு
"க்யா ஹுவா?" என்றான்

"ஆமா நான் ஹிந்தி பொண்ணு என்கிட்ட ஹிந்தில பேசுறீங்க....எனக்கு இங்லிஷ் தெரியும்" 

"ஹேய் கூல் எனக்கு கேஷ்வலா வந்துறிச்சி பட் நீ ஹிந்தி பொண்ணு இல்லைன்னாலும் ஹிந்தி பொண்டாட்டி தானே" என்றான் மென்மையாக

"ஓஹ் சார்க்கு அந்த நினைப்பு மனசுல தான் இருக்கா.... நான் நினைச்சேன் சென்னைல விட்டுடு வந்தீங்கன்னு" என்று விட்டு முறைத்தாள்....

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now