அன்றுடன் கதிர் வீட்டுக்கு வந்துவிட்டு போயி மூன்று நாட்கள் கடந்து இருந்தது....
வித்யா எழுந்து நடமாடினாள்....
வித்யாவும் ஆதியும் மறந்தும் பேசிக்கொளளாமல் இருந்தனர்...நாளை தன் தங்கையின் திருமணம் என்று நினைக்கும் போதே மனம் பரவசப்பட்டது...
"அம்மா சின்ன வேலையா வெளிய போய்ட்டு வர்றேன்" என்று வள்ளியிடம் கூறி விட்டு வீட்டை விட்டு மாயமாக மறைந்தாள்..
நேராக கோயிலுக்கு சென்றவள் சாமி கும்பிட்டு விட்டு கோயில் வாசலில் அம்ர்ந்து கொண்டாள்
பின்னாடி இருந்து வந்த நித்திஷ்
"வித்யா ஹவ் ஆர் யூ?" என்று கேட்டான்பழகிய குரல் என்பதால் திரும்பியதும் "ஹேய் மேன்...... ஐயம் பைன் வாட் எபௌட் யூ?" என்றாள்.
"என்கிட்ட போயி ஹவ் ஆர் யூன்னு கேக்குற உன்னைலாம் நிக்க வெச்சி சுடனும்" என்றான் சிரித்த முகமாக
"அட உன் வாய் இன்னும் அடங்கல்லல... எனிவேய்ஸ் பாப்பா இரண்டும் எங்க?" என்று கேட்டாள்
"டுவின்ஸ் வித்யா... அவள சமாளிக்கிற கெப்ல இவ அழுவா இவள சமாளிச்சி முடிக்கிறேன் அவ அழுற கடைசியில நானும் அழுறேன்...காய்ச்சல் வந்தா கூடா ஒன்னாவே வருது...."என்றான் தன் கஷ்டத்தை சுவாரஷ்யமாக
"பேசாம செக்கன்ட் மெரி பன்னிக்கலாம்ல.... பாப்பாஸ்காக ஆச்சும்" என்றாள் விது
"நீ வேற பெத்தவன் நானே அதுங்க சேட்டை தாங்காம புலம்புறேன் வெளி ஒருத்தி தாங்குவாளா.... வேண்டாம் வித்யா நான் இன்னும் என்னோட தேவதைய மறக்கல்ல" என்றான்.... சோகமாக
"நித்தி நீ வைப்ன்னு அவ கூட வாழ்ந்தவன் பட் உன் பொண்ணுங்க அம்மான்னு யாரையும் கண்டதுமில்ல... உணர்ந்ததுமில்ல.... ஜஸ்ட் குழந்தைக்காக ஆச்சும் கல்யாணம் பன்னிக்கோ" என்றாள்
"சரி அப்டியே கல்யாணம் பன்னிக்கிறதா இருந்தாளும் என் குட்டிஸ்ஸ பார்த்துக்க நல்ல பொண்ணு வேண்டும்ல" என்றான் கேள்வியாக
VOCÊ ESTÁ LENDO
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
Ficção Geralஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...