என் காதல்-15

3.6K 148 22
                                    

காலையில் சூரியன் படு உற்சாகத்துடன் தன் கடமையை செய்ய வந்தது.... அதே கடமை உணர்வுடன்.... உலகில் உள்ள அனைவரும் இயங்கி கொண்டு இருக்க..... வித்யா மட்டும் எழுந்தும் முகம் கழுகாமல் பெட் ஷீட்டுக்குள் கிடந்தாள்....

"அடிங்க இன்னும் எழுந்துக்காம இருக்கியே.... கமோன் விது" என்று கத்திக்கொண்டே கைக்கடிகாரத்தை கட்டினாள் அனு....

"அனு இன்னக்கி ரொம்ப தலை வலி.... காப்பி போட்டு குடிச்சிட்டு நான் வந்துட்றேன் நீ போ" என்றாள்....

"அப்டின்னா சரி விது பட் நீ காப்பி போட்டு குடிக்கிறதுக்குள்ள டைம் ஆயிரும் கென்டீன் போய் வாங்கி குடிச்சிக்க.... "
என்று கூறி விட்டு போய் விட்டாள்.... இன்று எக்ஸேம் வேறு இருப்பதாள்.... நன்றாக குளித்து ரெடியாகி கென்டீன் சென்றாள்....

கதிர் இல்லாமல் அவன் நண்பன் அர்ஜுன் நின்றான் விதுவை கண்டதும் ...

"கதிர் வாடா...."என்றான் அவனும் ஒரு நொடிக்குள் வந்து விட.

"விது என்ன சொல்ல போறீங்க... எதுவா இருந்தாளும் ஸ்ட்ரைட் ஆஹ் சொல்லுங்க?"
என்று படபடதான்

"அது வந்து இன்னக்கி பார்த்து எனக்கு தலை வலி எக்ஸேம் வேற இருக்கு.... ஸோ காப்பி ஒன்னு குடுங்க" என்றாள் ... அவள் காதலை சொல்லுவாள் என்று எதிர் பார்த்து நின்றவன் இப்படி காப்பி க்காக வருவாள் என்று நினைக்கவும் இல்லை..... ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல்

"ஓகே உக்காந்துக்க" என்று விட்டு உள்ளே சென்றான்
சில நொடிகளில் வந்தவன்

அவள்க்கு பக்கத்தில் காப்பியை வைத்து விட்டு
"சுக்கு போட்டு பன்னி இருக்கேன்... விது குடி தலை வலி போயிரும்"என்றான்... அவள் எதுவும் பேசாமல் குடித்து விட்டு பணத்தை கொடுத்தாள்...

"என் காசுல குடிச்சதா நினைச்சிக்க....பணம் வேண்டாம்" என்றான்... அவள் அதை கேட்காமல்

"பணத்த எடுங்க கதிர்.... எனக்கு ஓஸியில சாப்பிட புடிக்காது..."
என்றாள்... எதோ யோசனையில்

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora