வித்யாவின் தாய் வள்ளி கூறிய அறிவுரையின் படி அவள் ஒரு போதும் கென்டீன் செல்லவே இல்லை.... மிக்சர் முருக்கு கடலை போன்ற உணவுகள் வள்ளி தந்தாள் அதை சாப்பிட்டாள்....
அவர்களின் அறையில் மொத்தம் நான்கு பேர் அதிகமான நட்புடன் யாருடனும் பழகவில்லை... அனுவிடம் மட்டும் பேசுவாள்.... அவள் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது ஒரு தடவை கூட அந்த ரயில் பையனை காணவில்லை....
'இங்க தான் வர்க் பன்றதா சொன்னாரு காணவே இல்லியே அனுவிடம் கேட்க சங்கடமாக இருந்ததால் பாக்கும் போது பார்ப்போம் என்று அவனை பற்றி யோசிப்பதை விட்டு விட்டாள்
ஒரு நாள் க்ளாஸ் ரூமில் தலை சுற்றி வாந்தி போட்டதால் பாதியிலே ரூமிற்கு வந்து
கட்டிலில் விழுந்த 10 நிமிடத்தில் உறங்கினாள்....சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு போய் திறந்தாள்
சிரித்த முகமாக நின்றான் அந்த ரயில் பையன் தூக்க முகமாக இருந்தவள் உடனே கண்களை கசக்கிகொண்டு உத்து உத்து பார்த்தாள்...
"என்ன மெடம் இந்த பார்வை பாக்குறீங்க கண்ணு கீழே விழ போகுது...." என்று கூறி சிரித்தான் விதுவும்.... ஈஈஈஈஈ என்று இழித்தாள்
"அச்சோ என்னங்க நீங்க இந்த இழி இழிக்கிறீங்க பல்லு உதிர" என்று சொல்லும் முன்னே "அதுலாம் உதிராது நான் யூஸ் பன்றது கோல்கேட்" என்றதும் அவன் கல கல என்று சிரித்து விட்டான்
"சரி ஓவரா சிரிக்காம வந்த விஷயத்த சொல்லுங்க?"
என்றாள்"ஓஹ் அதுவா.... உங்களுக்கு தலை சுற்றி வாந்தி போட்டதா உங்க எச் ஒ டி சொன்னார் அதான் எலுமிச்சம் சாறு போட்டு எடுத்து வந்தேன்" என்று கூறி கப் ஒன்றை வைத்து விட்டு கதிரையில் அமர்ந்து கொண்டான்
"அச்சோ அதுலாம் வேண்டாம் சார்.... தூங்கி எழுந்தா போதும்"
"இத பாருங்க இத குடிக்காம போனா நான் இன்னக்கி சாப்பிடவே மாட்டேன்"என்று கூறி எழுந்து கொண்டான்....
கப்பை எடுத்து மடமட என்று அருந்திவிட்டு கப்பை கொடுத்து "போய் சாப்பிடுங்க" என்றாள்
CZYTASZ
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
General Fictionஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...