என் காதல்-30

3.2K 150 24
                                    

அனுவை பார்த்து விட்டு வந்து அடுத்த நாள் ஆகியும் வைஷுவால் அவளை மறக்க முடியவில்லை 'அந்த அக்கா பாவம் படுபாவி அந்த நாசமாகப்போன கதிர் தானே எல்லாத்துக்கும் மூலக்காரணம்... சீ அவன இந்த அக்கா எதுவும் பன்ன மாட்ற... அடுத்த ஹியரிங்க்கு நானும் போயி அவன பார்க்கனும்' என்று முடிவு செய்தாள்....

வேல் கொஞ்சமும் சங்கடமற்று தன் வேலையை பார்ப்பதை கண்ட வள்ளி

"வேல் நீ இந்த அளவு கூல்லா இருக்க அடுத்த ஹியரிங்ல ஏதாவது தப்பு நடந்து அந்த குழந்தை உன்னோடதுன்னு ஆகிச்சி" என்று சொல்லியவள்

"நோ நோ" என்று கத்தினாள்

"ஹேய் எதுக்கு டென்ஷன் ஆகிட்டு இருக்க என்னோட லாவ்யர் பேசுறத நீ பார்க்கனுமே பார்த்து இருந்தா நீயும் கூல்லா இருந்து இருப்ப..." என்றான்

"ஹான் அப்போ அடுத்த ஹியரிங்க்கு கூட்டிட்டு போ....." என்றாள்

'மீனிக்கு சாவு வாயால'என்ற மாதிரி ஆகிச்சில...என்று யோசித்தவன்

"நெவர் அப்படி எல்லாம் கூட்டிட்டு போக முடியாது அந்த ரேகா முகத்துல கூட நீ விழிக்க கூடாது" என்றான்

"ஓஹோ அப்போ சார் பார்பீங்க எனக்கு தான் காட்ட மாட்றீங்க ப்ளீஸ் நான் அவங்கள ஸ்ட்ரைட்டா பார்த்தது இல்லை..... ப்ளீஸ்" என்றாள் வள்ளி

"வள்ளி ஸ்டொப் இட் மா அந்த கழுதைய பார்க்க கஸ்தூரியா வேண்டாம் அப்படி நீ பார்க்கனும் என்றால் வேற டைம்க்கு பார்க்கலாம்" என்றான்

"சரிங்க முடிஞ்ச ஹியரிங்ல ரொம்ப சாந்தமா சமத்தா வாதாடினதா சொன்னீங்க அவங்கள இன்னைக்கு லன்ச்க்கு கூப்பிட்டு விருந்து வைக்கலாமே" என்றாள்....

'கடவுளே இவ ஒருத்திய வெச்சிட்டு டிஸைன் டிஸைன் பொய் சொல்றேன் அது போதாது என்று விருந்தா' என்று மனசுக்குள் அழுதான்

"என்னங்க அமைதியாக இருக்கீங்க சொல்லுங்க விருந்து வைக்கலாமா வேண்டாமா?" என்றாள்

"வேண்டாம் வள்ளி அவங்களுக்கு தேவையான பணத்த குடுத்து தானே பன்றோம் இதுல விருந்து வேற எதுக்கு நீ ப்ரீயா இரு வள்ளி"என்றான்

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang