என் காதல்-40

3.3K 187 180
                                    

மேகலா கீபோட்டை தட்டும் சத்தம் மட்டும் தான் அந்த அறையில் இருந்தது....

விது டேபிலில் கை வைத்து சாய்ந்து கொண்டாள்

ஆதி மொபைலை அலசிக்கொண்டு நின்றான்

"வித்யா..." என்று மேகலா அழைத்ததும் எழுந்து "என்னக்கா?"என்று கேட்டாள்

"வித்யா நீ சொன்ன மெதட்ல நான் செக் பன்னேன் இரண்டு முத்து மதுரை டு மும்பை போயி இருக்காங்க..... இரண்டு பேரும் 35-50 வயசுக்கு இடைப்பட்டவங்க..... அந்த இரண்டு பேர்லயும்.... ஒருத்தர் முத்துசாமி மற்றவன் முத்தய்யா...." என்று கூறும் போதே

"பொட்டோ காமிங்க அக்கா" என்றாள் லெப்பை திருப்பி காட்டினாள் அதில் முத்துசாமியை கண்டதும் "ஹேய் இவர் தான் நம்ம முத்து வித்யா" என்று பதறினான் ஆதி

"ஓகேக்கா முத்துசாமியோட எட்ரஸ் என்ட் மொபைல் நம்பர் குடுங்க?" என்றதும்.... அவளும் கொடுத்தாள்.....

மொபைல் நொம்பருக்கு அழைப்பை விடுத்தாள் வித்யா அது செயற்பாட்டில் இல்லை என்றதும் எட்ரஸை பார்த்து விட்டு

காரில் ஏறிக்கொண்டாள்

ஆதியும் ஏறிக்கொண்டான் நேராக அந்த எட்ரஸுக்கு சென்றாள்

வீடு முடப்பட்டு இருந்தது பக்கத்தில் ஒரே ஒரு வீடு இருந்தது கொஞ்சம் தள்ளி இன்னொரு வீடு பக்கத்து வீட்டு கதவை தட்டினாள்

உள்ளே இருந்து வந்த பெண் "யாருமா யாரு வேண்டும்" என்று கேட்டாள்

"முத்துசாமி அங்கிள் இல்லையா?"என்று கேட்டாள்....

அந்த பெண் நன்றாக உத்து பார்த்துவிட்டு

"அவர் ஒரு 4நாளைக்கு முன்னாடி போயிட்டார்மா.... "

"ஓஹ் எங்க போறதுன்னு சொல்லவில்லையா அம்மா?" என்று கேட்டாள்

"இல்லைடா என் வீட்டுகாரருக்கு அவன பிடிக்காது அதுனால நான் பேசுறதில்லை..." என்றார்

"யேன்மா பிடிக்காது?"என்று கேட்டதும் அந்த பெண் எதுவும் சொல்லாது தயங்கினாள்

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now