வைதேகி தன் மகன் இனிமேலாவது தங்களுடனே இருந்தால் நன்றாக இருக்கும்.. என்ற யோசனையுடன் அவனை பார்த்தார்.
ஏதோ யோசனையில் இருந்த செழியன்.. “இனிமே இங்கதான் மா..”என சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
வைதேகிக்கும் சத்யநாதனுக்கும் தங்கள் மகனின் முடிவு சந்தோஷத்தை கொடுத்தது.
இனிமேலும் சித்துவை இப்படி வாட விடுவது சரியல்ல.. ஆர்த்தியும் இனி இங்கிருக்க போவதில்லை.. சித்துவை பழைய மாதிரி பார்க்க வேண்டும்.. என செழியனின் உள்ளம் தவித்தது. அதற்கு நான் தான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான் செழியன்.
சித்ராவுடன் நேரம் செலவிட எதாவது காரணம் தேடினான் செழியன். ஒருநாள் அவள் முன் சென்று நின்றவன்.. “அக்காவோட குழந்தைக்கு டிரெஸ் வாங்கணும்.. நீயும் கூட வா.. சித்து..” என்றான்.
அம்மாவை பார்க்க வருவது போல வீட்டுக்கு வந்தான் சில நேரங்களில்.. இவ்வளவு நாள் வேலை காரணமாக எங்கோ இருந்தான்.. இப்போது இங்கே இருப்பதால்.. ஆர்த்தியும் இங்கே இல்லாததால் தன்னுடன் நேரம் செலவிட நினைக்கிறான் என எண்ணினாள் சித்ரா.
எங்கே அழைத்துச் சென்றாலும்.. செழியன் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தான்.. சின்னதாக ஒரு சிரிப்புடன் எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொள்வாளே தவிர.. எதற்கும் எந்த பதிலும் இருக்காது.
இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் சித்ராவை Mc Donalds அழைத்துச் சென்றான் செழியன்.
அந்த பெயரை பார்த்ததும் மிதுனின் நினைவு வந்தது சித்ராவுக்கு.
❤❤
ஒரு முறை நண்பர்கள் நால்வரும் மிதுனின் வீட்டில் கூடினர்.. செமஸ்டர் க்கு படிப்பதற்காக.. ஆனாலும் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் படிப்புமாக தான் நாளை கழிப்பர்.
மிதுன் வீட்டில் வேலை செய்யும் பொன்னம்மா.. எல்லாருக்கும் வேண்டியதை சமைத்து கொடுப்பார். நாள் இனிமையாக நகரும்.