கனவில்.. செழியனின் முகத்தை மிதுன் இடத்தில் கண்டதும்.. பயந்து அலறினாள் சித்ரா.
அவள் அலறல் சத்தம் கேட்டு.. வைதேகியும் சத்யநாதனும் அவள் அறைக்கு வந்தனர்.
வைதேகி.. “என்னடா.. என்னாச்சு..” என வினவினார் சித்ராவிடம்.
“அத்தை.. அத்தை..”என பதற்றத்துடன் வைதேகியின் கைகளை பற்றிக் கொண்டாள் சித்ரா.
“செழியன்.. செழியனுக்கு ஏதோ ஆகிடுச்சு.. செழியன்.. செழியன்.. ஹாஸ்பிட்டல்ல..” என தெளிவின்றி பேசினாள் சித்ரா.
அவள் தலையை மெல்ல வருடியவாறு.. “என்னடா.. கனவு எதுவும் கண்டீயா..” என கேட்டார் வைதேகி.
கனவு என்பது புரிந்தாலும் பயமும் பதற்றமும் குறையவில்லை சித்ராவுக்கு. அவளை சமாதானம் செய்யும் வழியறியாது பார்த்துக் கொண்டிருந்த வைதேகி.. சத்யநாதனிடம்.. “செழியனுக்கு போன் பண்ணுங்க..” என்றார்.
அவரும் சரியென செழியனுக்கு போன் செய்தார். “என்னடா சொல்ற.. எந்த ஹாஸ்பிட்டல்..” என சத்யநாதன் சொன்னதைக் கேட்டதும்.. சித்ராவின் இதயம் பயத்தில் தன் துடிப்பின் வேகத்தை கூட்டியது.
“ஆபிஸ் வேலையா வெளியே போகும் போது சின்ன ஆக்சிடெண்ட்டாம்.. கால்ல லேசா அடி பட்டிருக்காம்.. ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம்..” என சொன்னார் சத்யநாதன்.
சித்ரா பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க.. அவளுடன் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர் வைதேகியும் சத்யநாதனும்.
லேசான அடி தான்.. காலில் கட்டுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான் செழியன். அந்த அறைக்குள் நுழையவே தயங்கி நின்றாள் சித்ரா சில நிமிடங்கள்.
வைதேகியும் சத்யநாதனும்.. செழியனிடம் எப்படி ஆக்சிடெண்ட் நடந்தது.. அடி பலமா.. என விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“ஒன்னுமில்லை பா.. லேசா தான்.. இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க.. நீங்க போன் பண்ணதால தான் உங்க கிட்ட சொன்னேன்..”என்றான் செழியன்.