அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா.. இன்னும் உறங்காமல் இருந்த தாயை கண்டாள். மணியை பார்க்க.. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
சித்ரா ஏதோ சொல்லத் தொடங்கும் முன்.. கமலி.. கோபத்துடன்.. “இப்டி இன்னும் எவ்ளோ நாளைக்கு ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்து அழப்போற..” என கேட்டார்.
பதில் சொல்ல முடியாமல்.. அமைதியாக நின்றிருந்தாள் சித்ரா.
“இப்டி நீ இருந்து என்னத்த சாதிக்க போற.. உனக்கு ஒரு கல்யாணம்.. பண்ணி பார்க்க ஆசைப்படுறது.. தப்பா..” என கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கமலி திடீரென மயங்கி விழுந்தார்.
திடீரென கமலி மயங்கி விழுந்ததில் பதற்றம் தொற்றிக்கொண்டது சித்ராவை. ஏற்கனவே நாள் முழுக்க சாப்பிடாததில் உடல் பலமின்றி இருந்தது சித்ராவுக்கு.. பதற்றத்தில் உடல் வியர்க்க.. செய்வதறியாது திகைத்தவளின் மூளை யோசிக்க மறுத்தது.
ஆர்த்தி வீட்டிலும் யாருமில்லை.. இருந்தாலாவது வினோத் உதவிக்கு உடனே வந்திருப்பான்.. செழியனுக்கு போன் செய்தாள் சித்ரா.
“நீ பதறாத.. நான் உடனே வர்றேன்..” என்ற செழியன் அந்த நள்ளிரவிலும் உடனே கிளம்பினான்.
கமலியை ஹாஸ்பிட்டலில் அனுமதித்தனர். கமலிக்கு சிகிச்சை அளித்த பின்.. சித்ராவிடமும் செழியனிடமும் பேசிய மருத்துவர்.. “over stressனால வந்த மயக்கம் தான்.. பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை.. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க சொல்லுங்க.. காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்..”என்றார்.
சோர்ந்து போயிருந்த சித்ராவை கண்டதும் புரிந்து கொண்டு டீ வாங்கி கொடுத்தான் செழியன். உடலுக்கும் தெம்பு வேண்டுமே மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் சித்ரா.
மருந்துகளின் உதவியால் உறங்கிய கமலி.. காலையில் தான் கண்விழித்தார் கமலி.
கமலியிடம்.. “என்னமா கவலை உங்களுக்கு.. stressனால வந்த மயக்கம்னு டாக்டர் சொன்னாங்க.. எதையும் யோசிக்காம ரிலாக்ஸா இருங்க மா..”என்றான் செழியன்.