❤ 10

3.5K 165 30
                                    

சித்ராவிடம் பேசுவதற்கு தன்னை மனதளவில் தயார் செய்து கொண்ட செழியன் அறைக்குள் நுழைந்தான்.

“சித்து..” என அழைத்தான் செழியன்.

திரும்பி பார்த்தவளின் கண்களில் கோபம் இருந்தது. அவன் இத்தனை நாட்கள் கண்டிராத அவன் சித்துவின் முகம் இது. சற்று தடுமாற்றமாக தான் இருந்தது.

“நா.. நான்.. சொல்றதை கொஞ்சம் கேளு..”என்றான் செழியன் மெல்ல.

“நான் எதையும் கேட்க விரும்பலை.. என் மனசில இருக்கிறது மிதுன் மட்டும் தான்னு தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு எப்டி மனசு வந்துச்சு..

உன் மனசில.. இந்த எண்ணத்த வச்சிட்டு தான் என்கிட்ட இவ்ளோ நாள் பேசினீயா.. எனக்கு நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு..” என்றாள் சித்ரா கோபமும் எரிச்சலுமாக.

“அம்மாவுக்காக மட்டும் தான் நான் சம்மதம் சொன்னேன்.. இந்த வீட்டில இருக்கிற ஒரு பொருள் மாதிரி தான் நான் இருப்பேன்.. உயிரோட நடமாடுற பொருள் அவ்ளோதான் வித்தியாசம்..” என்றாள் சித்ரா.

பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க நினைத்தது எல்லாம் மறந்து.. அவள் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள் செழியனை வதைத்தது.

கண்களை மூடி தன் வலியை மறைக்க முயற்சித்தான். நொடிகள்.. நிமிடங்கள் ஆனது கூட தெரியாமல்..

செழியன் கண் விழித்து பார்க்கையில் சோபாவில் படுத்திருந்தாள் சித்ரா. அவளையே பார்த்தபடி உறக்கம் தொலைத்திருந்தான் செழியன்.

கமலி தன் சொந்த ஊரில் சில காலம் இருக்கப் போவதாக சொன்னார். இங்கே இருந்தால் தான் சந்தோஷமாக இல்லை என்பது புரிந்து எதையாவது சொல்வார் என நினைத்த சித்ரா.. மறுத்து பேசவில்லை.

வைதேகியிடமும் சத்யநாதனிடமும் சித்ரா பாசமாக இருந்தாள். அதனாலோ என்னவோ அவர்கள் கண்ணுக்கு செழியனும் சித்ராவும் விலகி இருப்பது புலப்படவில்லை.

ஆனால் செழியனின் அக்கா செல்வி இருவரும் விலகி இருப்பதை சில நாட்களிலே கவனித்து விட்டாள்.

நேசிக்க நெஞ்சமுண்டு..Where stories live. Discover now