தீபன் அவளிடம் நீட்டிய நியூஸ் பேப்பர் பொட்டலத்தை பார்த்ததுமே நித்திலாவிற்கு சிரிப்பு வந்தது. அவன் தந்த கவிதையை ரசித்தவள், "கவிதை நல்லா இருக்கு! நீங்க எழுதினதா?" என்று கேட்ட படி இன்னும் ஒரு ராப்பரை பிரித்ததும் அவனை கோபமாக முறைத்தாள். தீபனின் குறும்பு சிரிப்பு மென்மேலும் வளர்ந்தது.
அவளின் பாராட்டுக்கு நன்றி சொன்னவனிடம், "ஏன் ஸார்..... நான் என்ன குழந்தையா? என் கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர்ற குழந்தைங்க சாக்லேட் சாப்பிடுறதயே நான் என்கரேஜ் பண்றதில்ல. நீங்க என்னடான்னா எனக்கு இதை கிஃப்ட்னு வாங்கி தர்றீங்க?" என்று பொரிந்தாள்.
"த்த்சு; த்த்சு..... ரொம்ப கஷ்டம் பேபி!" என்று அவளைப் பார்த்து உச்சுக்கொட்டினான் தீபன்.
"எ........என்னது? எத கஷ்டம்னு சொல்றீங்க?" என்று கேட்டவளிடம்,
"உன்னோட பேசுறத தான் கஷ்டம்னு சொல்றேன் பேபி!
நான் எத்தன தடவ எம்பேர உனக்கு நியாபகப்படுத்துனாலும் உன் வாயில இருந்து என் பெயரை வர வைக்க முடியலையே? ஸார் ஸார்னு நீ என்னை கூப்புடும் போது என்னால அத டாலரேட் பண்ணிக்கவே முடியல. ஸோ sad. மே க்யா கரோ?" என்றான் தீபன்."ஹலோ பேச்சை மாத்தாதீங்க.....! எனக்கு எதுக்காக லாலிபாப் வாங்கிட்டு வந்தீங்க? அதை கிப்ட்னு வேற சொல்லி எங்கிட்ட எதுக்கு குடுத்தீங்க?" என்று அவன் முன்னே விரல் நீட்டியவளைப் பார்த்து தன் கைகளை கட்டிக் கொண்டவன் அவளிடம்,
"பாரு..... இப்போ கூட உன் பேச்சு கம்ப்ளீட் ஆகல. ஆல்ரைட்! குழந்தைங்க தானே க்ரீம் பிஸ்கெட் சாப்பிடுவாங்க; ஃப்ரெஷ் ஜுஸ் குடிக்கப் பிடிக்காம பாட்டில் ஜுஸ் குடிப்பாங்க? ஸோ க்ரீம் பிஸ்கட், ஜுஸ் மாதிரியே குழந்தைங்களுக்கு பிடிக்குற லாலிபாப்பையும் கூட நீ சாப்பிடுவியோன்னு நான் நினைச்சேன்!
"ஸோ நமக்குள்ள ஒரு ப்ரெண்ட்ஷிப் டெவலப் ஆகணும்ங்குறதுக்காக அந்த
ஸ்வீட்ட உனக்கு கிப்ட் பண்ணலாம்னு எனக்கு தோணுச்சு!" என்று அவளிடம் புன்னகையுடன் கூறினான்.
YOU ARE READING
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romance"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...