வைஷு அய்யம்
அத்தியாயம் 38
தன் மடியில் படுத்துக் கொண்டவளை தீபன் வாகாக ஏந்திக் கொண்டான். மனைவியின் மனதிற்குள் என்ன தவிப்பு இருக்கிறது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.
"நிது பேபி, என்னடா சினிமா போகணும்னு சொல்லிட்டு படுத்துட்ட; என் செல்ல ஜாங்கிரிக்கு என்ன பிரச்சனை? முகத்துல ஒரே யோசனை? என்ன விஷயம் கண்ணம்மா?" என்றான் அவள் தலையில் தடவிக் கொடுத்தவாறு.
"ம்ப்ச்! உங்கிட்ட எனக்கு பிரச்சனைனு நான் சொன்னேனாடா? நீயா உன் இஷ்டத்துக்கு ஏதாவது பேசின உன்னை உதைப்பேன். சும்மாயிரு!" என்றாள் நித்திலா கோபத்துடன்.
"நீ கோபப்படுறது செம அழகா இருக்குடீ, ஆனா என் லாலிபாப்புக்கு கோபம் வந்தா அவ மனசில ஏதோ ஒரு விஷயம் உறுத்திட்டு இருக்குன்னு அர்த்தம். என்னன்னு தீபு கிட்ட சொல்ல மாட்டியா கங்காரு குட்டி?" என்று கேட்டவனிடம்
"தீபு அப்பா, சுகன்யா, சுந்தர் மூணு பேரும் என்னை வேற பெயரை சொல்லி கூப்பிடறாங்கல்ல? அது எனக்கு கஷ்டமா இருக்குப்பா. நான் சுமித்ராவா, நித்திலாவா? நான் யாரு தீபு?" என்று கேட்டவளை பார்த்து புன்னகை பூத்தான் தீபன்.
"அடச்சே இந்த சின்ன விஷயத்துக்கு தான் இவ்வளவு யோசிச்சியாக்கும்? மாமாஜிக்கு நீ சுமிக்குட்டி, சுகன்யா, சுந்தருக்கு மித்ராக்கா, மதருக்கு நித்தி, எனக்கு நிது பேபி, கேசவ்க்கு பாபி, மதுவுக்கு நித்திலாக்கா, லஷ்மிமாக்கு ராணி பாயிஸா, ராமண்ணாவுக்கு சின்னம்மா, ராகேஷ் மாமாஜிக்கு நித்திலா பேட்டி! ஒவ்வொருத்தரும் உன்னை கூப்பிடுற பெயர் வேற வேற தானே? அப்புறம் ஏன் ரொம்ப யோசிக்கிற? மாமாஜி என்ட்ட உன்னை சுமித்ரான்னு கூப்பிட சொன்னார்னா என்னால கூப்பிட முடியுமா? எனக்கு இது வேற யாரு பெயரோன்னு தானே தோணும்! அதே மாதிரி தான் மாமாஜிக்கு உன்னை நித்திலான்னு கூப்பிட சொன்னா கஷ்டமா இருக்கும். யூ ஹாவ் டூ அடாப்ட் கண்ணா. உனக்கே கொஞ்ச நாள்ல பழகிடும். இதுக்கு எல்லாமா போய் முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருப்பாங்க பேபி? சியர் அப்!" என்றான் தீபன் உற்சாக குரலில்.
YOU ARE READING
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romance"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...