💙 ஓவியம் 34

7.3K 232 30
                                    

அதிகாலை ஐந்து மணியளவில் தீபனின் உறக்கம் கலைந்தது. தன் மார்பில் முகம் வைத்து தோள்களில் கைகளை இறுக்கத்துடன் பற்றிக் கொண்டு உறங்கும் நித்திலாவின் முகத்தை அவன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அழகு ஒரு புறம் இருக்கட்டும், இவளை விட எத்தனை அழகான பெண்களை கண் பார்வையிலேயே மிரட்டி இருக்கிறான்? இவளிடம் மட்டும் தான் எவ்வாறு இவ்வளவு ஈர்க்கப்பட்டோம் என்று தீபன் யோசித்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

ஐந்தரை மணிக்கு நித்திலா மெல்ல அசைந்தாள். திரும்ப முயன்று அது முடியாமல் போக கண்களை திறக்க முயற்சித்தாள். இன்னும் சிறிது நேரம் ஓய்வு தேவை என்று கண்கள் கெஞ்சியது. மறுபடியும் வாகாக தன்னவன் தோள்களில் படுத்துக் கொண்டாள்.

"ஹாய் பேபி! வெரி குட் மார்னிங்! தீபுவை ஃபேஸ் பண்றதுக்கு உனக்கு வெக்கமா இருக்கா? கண்ணைத் திறந்து பாரு லாலிபாப்!" என்று தன் மனைவியின் காதருகில் குனிந்து மெல்லிய குரலில் முணங்கினான்.

"தீபு! ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க; டையர்டா இருக்கு. நைட் என்னை நீங்க எங்க தூங்க விட்டீங்க?" என்று குறை கூறும் குரலில் அவனிடம் கேட்டாள் நித்திலா.

"டோண்ட் ப்ளேம் மீ ஜாங்கிரி, நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு தான் கஷ்டம்னு நான் தான் கேசவ் கிட்ட சொல்லி விட்டேனே? நீ சீக்கிரமே வந்துருக்கணும். இன்பாக்ட் நமக்கு இது பர்ஸ்ட் டைம் எக்ஸ்பீரியன்ஸ்; ஸோ உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம்னு நெனச்சு நான் நேத்து நைட் கொஞ்சம் கண்ட்ரோல்டா தான் இருந்தேன். இனிமேலும் உன்னை இதுக்கு மேலயும் நிறைய படுத்துவேன். இந்த விஷயத்துல என்னால நல்லவனா இருக்க முடியாது. ஐ'ம் ஸாரி! ப்ளீஸ் பேர் வித் மீ!" என்றான் தீபன் சிரிப்புடன்.

அவள் முகத்தில் தெரிந்த யோசனையை கண்டதும், "இப்போ மேடம் தலைக்குள்ள என்ன ஓடிட்டு இருக்கு?" என்று அவளிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"இல்ல தீபு! ரெண்டு நாளா மூடு கொஞ்சம் நல்லாவே இல்லை. தேவையில்லாம கோபம், கோபமா வந்தது. பட் இப்போ ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கிற மாதிரி இருக்கு. ஏன் தீபு?" என்று கேட்டபடி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள் நித்திலா.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now