💙 ஓவியம் 18

6.8K 246 3
                                    

"நிது உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். கேக்கட்டுமா?" என்று சிறிது வெட்கப்பட்டவனிடம்

"என்ன தீபு உங்க வாய்ஸ் இவ்ளோ ஸாப்ட் ஆகுது; ஒரு பையன் வெட்கப்பட்டா எப்படி இருக்கும்னு உங்க கிட்ட தான் தீபு பார்க்குறேன். ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் நித்தி.

"நிது என்னோட கிப்ட்டை நீ இன்னும் தரவேயில்லையே? இப்போ தர்றியா?" என்றான் தீபன் ஆர்வத்துடன்.

"ஐயோ! அதுல பென்டென்ட் ரெடி ஆகலையே தீபு! உங்களுக்கு ஆசையா இருக்குன்னா மத்த கிப்ட்ஸ் இப்போ தர்றேன். பென்டென்ட் நாளைக்கு தரவா?" என்றாள் நித்தி அவன் ஆர்வம் கண்டு!

அவனை ரசித்தபடி தீபனின் அறைக்கு அவனை அழைத்து சென்று ஒரு டீ ஷர்ட்டை அவனுக்கு போட்டு விட்டாள்!

மோதிரத்தை கையில் எடுத்து, "நல்லா யோசிச்சுக்கோங்க பிஸிபேளா. மோதிரம் போட்டா பாதி கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்!" என்றவளிடம் அசராமல் கையை நீட்டினான் தீபன்.

"மோதிரம் போட்டா பாதி கல்யாணம் முடிஞ்சதுன்னா, ப்ரேஸ்லெட், கம்மல், செயின் எல்லாம் போட்டு விட்டா......... நிது அப்போ நம்ம கல்யாணம் முடிஞ்சுடுச்சாடீ! சூப்பர் இனிமேல் குலோப்ஜாமூன் நிறைய சாப்பிடலாம்!" என்று அவள் உதட்டில் பார்வை பதித்தவனிடம்

"ஹலோ ஸ்வீட் நிறைய சாப்டா சுகர் வந்திடும் மிஸ்டர் பிஸிபேளா" என்றாள் சிரிப்புடன்.

"ஓஓஓ! இப்ப நிறைய ஸ்வீட் சாப்ட தான் போறேன்; அப்டி எனக்கு என்ன வருதுன்னு நானும் பார்க்குறேன்!" என்று சொல்லிக் கொண்டே தன் டீ ஷர்ட்டின் கைப்புறத்தை மடித்து விடுவது போல் பாவனை செய்தவனின் செயல் கண்டு சிரிப்புடன் அவனிடமிருந்து விலகிக் கொண்டவள்,

"நான் ரூமுக்கு போறேன். என் ஏரியாவுக்குள்ள ஜெண்டில் மேன் நாட் அலவ்ட்! போய் தூங்கு புஜ்ஜி. குட் நைட்!" என்று சொன்னவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளறைக்கு அனுப்பி வைத்தான் தீபன்.

மறுநாள் காலையில் நித்திலா எழும் போதே தீபனின் குரல் கீழேயிருந்து உச்ச ஸ்தாயலில் கேட்டுக் கொண்டு இருந்தது. தன்னவன் கோபத்தை பற்றி ஏற்கனவே லஷ்மிமா மற்றும் கேசவ் இருவரும் நித்திலாவிடம் சொல்லி வைத்து இருந்தனர். ஆனால் இப்பொழுது இவ்வளவு கோபப்படும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now