💙 ஓவியம் 4

9K 252 5
                                    

"ஹலோ, ஐ'ம் நித்திலா" என்று தன் தளிர் கரங்களை குவித்து வணக்கம் தெரிவித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் நங்கை.

மறுபடியும் ஆச்சரியம் தீபனுக்கு. அறிமுகமில்லாத பெண்ணை ஹக் செய்வது சரியாக இருக்காது என்று தான் அவளிடம் கை குலுக்கலுக்காக கை நீட்டினான். இப்போது அதற்கும் தடாவா?

மேலை நாடுகளுக்கு இணையாக எங்களது தேசத்தின் நாகரீகமும் வளர்கிறது என்று சொல்லி விட்டு பப்பிங், க்ளப்பிங், மிட்நைட் பார்ட்டீஸ் என்ற பெயர்களை வைத்துக் கொண்டு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் செருப்பைப் போல் காலடியில் போட்டு மிதிப்பது தீபனுக்கு அறவே பிடிக்காத ஒரு விஷயம்.

தங்களுடைய சிறிய உலகத்திற்குள் ஜாலியாக ஒரு மேங்கோ அல்லது வாட்டர்மெலன் ட்ரிங்க்குடன் சிப்ஸ், விரலில் மாட்டிக் கொள்ளும் அப்பளம் என சகோதரர்கள் இருவரும் ஒரு படத்தை என்ஜாய் செய்து பார்த்து முடிப்பார்களே தவிர மேற்கூறிய படி பார்ட்டிகளின் பக்கம் எல்லாம் அவர்களின் கால்விரல் கூட பட்டதில்லை.

தான் பிற பெண்களைப் பார்த்து அருவருப்படைந்து ஒதுங்கியது போய், இப்போது தன்னைப் பார்த்து ஒரு பெண் ஒதுங்குகிறாள் என்ற எண்ணமும், அவளது பண்பு நிறைந்த நடை, உடை, பாவனைகளும் தீபனை அவள்புறம் மிகவும் ஈர்த்தன.

"மேடம் ரொம்ப முன் ஜாக்கிரதை போல...." என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான்.

"நான் ஒரு பிஸினஸ் மேன் கம் Ad ப்லிம் டைரக்டர். இப்போ மும்பையில வொர்க் முடிச்சு மதுரை போறோம். நானும் கேசவும் ப்ரெண்ட்ஸ், பிரதர்ஸ், செகரட்டரி பாஸ், அப்புறம் எனக்கு எல்லா ரிலேஷனும் அவன் தான்! வெல்...... நீங்க?" என்று அவளைப் பற்றி கேட்டான்.

அதற்குள் கேசவ் வந்து எதிர் சீட்டில் அமர்ந்து "பையா டின்னர் ஆர்டர் பண்ணிட்டு வந்துடட்டுமா? உங்களுக்கு என்ன வேணும்?" என்றான்.

"ஹாய்ங்க! கை குடுங்க! சூப்பர்ங்க நீங்க! ஏதோ காலேஜ் கேர்ள் லீவுக்கு வேற ஊருக்குப் போறீங்க போலன்னு யோசிச்சா நீங்க ஒரு டாக்டர்னு சொல்லி நாங்க எக்ஸ்பெக்ட்டே பண்ணாத மாதிரி ஒரு ஷாக் குடுத்துட்டீங்க! சூப்பரா அந்த குட்டி பையனை சமாளிச்சீங்க! இல்லைன்னா கத்தி கத்தி கத்தியே இல்லாம எங்க கழுத்த அறுத்துருப்பான்! பை த வே, ஐ'ம் கேசவ்!" என்று கூறி பாராட்டுடன் தன்னை அறிமுகமும் செய்து கொண்டவனை தன் கூர்விழி கொண்டு முறைத்தாள் நித்திலா.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now