💙 ஓவியம் 45

6.1K 217 21
                                    

கேசவும், மதுவும் மதுரை வருவதற்கு மறுநாள் மதியம் ஒரு மணி ஆகி விட்டது. முறைத்தவாறு நின்று வரவேற்ற மகேஷிடம் கேசவ், "மகேஷ் லன்ச் டைமுக்கு கரெக்ட்டா மதுவை கூட்டிட்டு வந்துட்டேன். ஓகே தானே?" என்றான்.

மதுவின் காதருகில் குனிந்து, "எல்லாருடைய கண்ணும் உன் மேல தான் இருக்கு. நீ உன் ரூமுக்கு போயிட்டு டென் மினிட்ஸ்ல வா! நான் இங்க கொஞ்சம் கூல் பண்ணி வைக்கிறேன்!" என்று கேசவ் சொன்னதும் மது அவளறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பத்து நிமிடங்களில் மதுமதி வந்த போது, சேகரும், கல்யாணியும் இயல்புக்கு திரும்பி இருந்தனர்.

கேசவ் கிளம்ப வேண்டும் என்று சொன்னதை மறுத்து மதிய உணவு சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்று கட்டளை இட்டார் சேகர். கேசவும் உணவை ரசித்து உண்டு விட்டு மதுவிடம் விடை பெற்று கிளம்பினான்.

மதுவிடம் மகேஷ் சண்டைக்கு வந்த போது, "பிரதர் வேண்டாம். அப்புறம் நான் நிறைய விஷயங்களை சேகர் கிட்ட சொல்ல வேண்டியதிருக்கும்!" என்றாள் மிரட்டலாக.

"போடி; இவ்ளோ வருஷம் கழிச்சு அப்பாக்கு தெரிஞ்சா தான் என்ன?" என்று கேட்ட தன் அண்ணனிடம்

"உன்னை அப்பா ரொம்ப நல்லவன்னு நம்பிட்டு இருக்கார் பாரு! அந்த இமேஜ் டேமேஜ் ஆகிடும். பரவாயில்லையா?" என்றாள் நக்கல் குரலில்.

"என்னடீ ஓவரா பேசுற? உங்க அண்ணி கூட ரெண்டு, மூணு நாள் சினிமா, காபி ஷாப், பார்க் எல்லாம் போனேன். உன்னை மாதிரி நைட் வெளியே தங்கிட்டா வந்தேன்?" என்று கேட்டவனிடம்

"உன்னை யாரு போக வேண்டாம்னு சொன்னாங்க மகேஷ் பையா! நீ போகலைன்னா நானும் போகக் கூடாதுன்னு சொல்வியா? கேசவ் கொஞ்சம் கோபக்காரன்; பட் காரெக்டர் வைஸ் ரொம்ப நல்லவன்; எங்கிட்டே எவ்வளவு டீசன்டா நடந்துக்கிட்டான் தெரியுமா?" என்ற தங்கையிடம்

"என்ன மது மாப்பிள்ளையை போய் மரியாதை இல்லாம பேசுற. இனிமேல் இப்படி கூப்பிடாம மரியாதையா பேசு!" என்று அவள் தலையை வருடி விட்டு சென்றான் மகேஷ்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Donde viven las historias. Descúbrelo ahora