💙 ஓவியம் 40

6.5K 219 38
                                    

தீபனும், கேசவும் மும்பையில் வேலையை முடித்து, லோனாவாலாவில் ஷுட்டிங் பணிகளை செய்து முடித்து விட்டு, மறுபடியும் மும்பைக்கு செல்லும் வரையில் ஆசிரமத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து பொறுப்பாக இடத்தை அந்த உரிமையாளரிடம் ஒப்படைக்கும் வேலையை ராமநாதன் ஏற்றுக் கொண்டார். தன் மகளுக்கு சமூகத்தில் ஓர் அடையாளம் கொடுத்து, அவளுக்கு நல்ல வாழ்வும் அமைத்து தந்த மதருக்கு தன் நன்றியை தெரிவித்து தன் கடமையாக ஏற்று அந்த வேலையை செய்து முடித்தார். மதரையும், பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினர். மதுரையில் தங்குவது மதர் எடுத்த முடிவு தான். சிறுவர்களை அவர்கள் பழகிய சூழ்நிலையில் இருந்தும் அவர்களின் பள்ளி நண்பர்களிடம் இருந்தும் பிரித்து மதுரைக்கு அழைத்து செல்வதற்கும் தீபனும், கேசவும் பல விதமான கதைகளை சொல்ல வேண்டி இருந்தது. இருந்தாலும் இருவரும் சமாளித்துக் கொண்டனர்.

தீபன் மதரிடம், "நீங்க மும்பையில இருக்கணும்னு நினைச்சா இங்கயே அரேன்ஜ் பண்றேன். உங்க முடிவு தான் மதர்!" என்றான். "ஆனா ஒரு பெர்சனல் ரிக்வெஸ்ட் மதர், பிள்ளைங்களும் நீங்களும் மதுரையில இருந்தீங்கன்னா எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும். கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க மதர்!" என்றான் கெஞ்சலுடன்.

மதர் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு மதுரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஹோம் இயங்குவதற்கு மதுரையில் ஒரு பெரிய வீட்டையும் விலைக்கு வாங்கி ஊருக்கு சென்றவுடன் மதர் கையில் ஒப்படைப்பது என்றும், ஹோமிற்கு வேலைக்கு இரண்டு ஆட்கள், செக்யூரிட்டி என்று அனைத்தையும் கேசவுடன் தீபனும் கவனித்துக் கொண்டான். ஹோமின் நிர்வாக பொறுப்பு ராமநாதனிடம் தரப்பட்டது. தீபன் தன் மாமாவிடம்,

"மாமாஜி, உங்க பொண்ணு எனக்கு கிப்ட்டா 30,000 ரூபாய் குடுத்தா. அந்த பணத்தை நல்ல மனசோட நிறைய ப்ராபிட் கிடைக்கணும்னு விஷ் பண்ணி குடுத்தா. இப்போ அவ குடுத்த பணத்தில வந்த லாபத்திலும் சேர்த்து தான் வீடு வாங்கியிருக்கேன். உங்க பொண்ணு, என் வொய்ப்ங்கிறதால சொல்லலை மாமாஜி, அவ ரொம்ப நல்ல பொண்ணு!" என்றவனை அணைத்துக் கொண்டார் ராமநாதன். அவர் மதுரையிலேயே தங்கிக் கொள்வதாக முடிவு செய்து தன் பிள்ளைகளிடம் சொல்லி விட்டார்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now