💙 ஓவியம் 28

6.5K 243 23
                                    

"நான் கிளம்பட்டுமா? டைம் ஆகிடுச்சுடா!" என்று தன்னிடம் கேட்ட மதுவிடம், "கொஞ்ச நேரம் இருந்துட்டு போ ஹனி!" என்றான் கேசவ் கெஞ்சலுடன்.

"ஏய்; என்னடா சும்மா சும்மா என்னைய ஹனின்னு கூப்பிடுற? ஒழுங்கா மதுன்னு கூப்டுடா!" என்றாள் அவனிடம் கோபத்துடன்.

"ஏன் மது..... இந்த வாங்க, போங்க மாதிரி தமிழ்ல நிறைய மரியாதை தர்ற வார்த்தை எல்லாம் இருக்குறது உனக்கு தெரியாதா?" என்றான் சிரிப்புடன்.

"இந்த ஒட்டகத்துக்கு நான் குடுக்கிற மரியாதை போதும். ஏன்டா இவ்வளவு பெரிசா வளர்ந்து வச்சுருக்க? பாரு, நான் உன் பக்கத்துல நின்னா இன்னும் குட்டியா தெரியுறேன்!" என்றாள் மது வருத்தத்துடன்.

"ஹனி..... நான் மேல வளர்ந்து இருக்கேன். நீ சைட்ல வளர்ந்து இருக்க; இதுக்கு மேலயும் குண்டா ஆகிடாத பம்ப்ளிமாஸ், இப்போ chubby ஆ அழகா இருக்க, நான் கொஞ்சம் பெண்ட் ஆகிகிட்டா நம்ம ஹைட் கரெக்டா மேட்ச் ஆகிடும். டோண்ட் வொர்ரி! நீ கட்டிப் பிடிக்கும் போதெல்லாம் நான் குனிஞ்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்!" என்றான்.

"எனக்கு ஒரு பெரிய டவுட்டு ஹனி!
மதுன்னா தேன், ஏன் சரக்குன்னு கூட வச்சுக்கலாம். அது ஓகே; ஆனா உன்னை மாதிரி ஒரு கழண்ட கேஸுக்கு எதுக்கு மதின்னு பேர் சேர்த்து வச்சாங்க? பார்த்தவுடனே எனக்கு மட்டும் போதை தர்ற என் ஸ்வீட் ஹனிடி நீ! ஸோ உன்னை நான் ஹனின்னு தான் எப்பவும் கூப்பிடுவேன்!" என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டான் கேசவ்.

"திட்டவும் செய்ற, பாராட்டவும் செய்ற, அதனால உன்னை சும்மா விடுறேன். இல்லைன்னா மவனே செம அடி வாங்கியிருப்ப! பம்ப்ளிமாஸ், கழண்ட கேஸுன்னு சொல்ற; இருடா, என் லவ்வர் கிட்ட சொல்றேன். அவன் உன்னை கவனிச்சுக்குவான்!" என்றாள் சிரிப்புடன்.

"உன் லவ்வர்னா நான் தான் அவன்.... என்னைய நானே கவனிச்சுக்குன்னு சொல்றியா? கவனிச்சுட்டா போச்சு!" என்று மதுவிடம் சொன்னவன், அறையில் ஒரு கண்ணாடியின் முன்னால் போய் நின்று கொண்டு தன்னை தானே அப்படி இப்படி திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு, "ஹனி! உன் லவ்வர் என்னை கவனிச்சுட்டான்டீ!" என்றான். மது சிரித்துக் கொண்டாள்.

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Where stories live. Discover now