மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து தனது பயணத்தை இனிமையாக ஆரம்பிக்க ஆயத்தமாக இருந்தது. நித்திலாவிற்கு இனம் புரியாத ஒரு பரவசம் உடம்பெங்கும் ஓடிக் கொண்டு இருந்தது. தன் ஒரே உறவான மெர்சி மதரை நினைத்துக் கொண்டாள். அவரையும் உறவென்று அவள் சொல்லிக் கொள்ள முடியாது தான்.... ஏனெனில் அவள் இருந்த ரைசிங் ஸ்டார் ஹோமின் அனைத்து குழந்தைகளுக்கும் மெர்சி மதர் தான் கார்டியன்!
அதனால் அவரை இவள் மட்டுமாக உறவென்று சொந்தம் கொண்டாட முடியாதல்லவா? இருந்தாலும், இவ்வளவு வருடங்களாக அவளை வளர்த்து, ஆளாக்கி, அவளுக்காக இப்போது மதுரையில் ஒரு வேலையையும் வாங்கிக் கொடுத்த உயர்ந்த மனுஷி மெர்சி மதர் தான்; அதனாலேயாவது நித்திலா அவரை பெருமையுடன் தன் உறவென்று சொல்லிக் கொள்வாள்.
தான் அவர் கைகளில் கிடைக்கும் போது 8 மாத குழந்தையாக இருந்ததாக மதர் சொன்ன நியாபகம். யாருமற்ற நிலையில் இருந்த ஒரு பெண் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து, அழகான ஒரு பெயரிட்டு, ஆதரவு அளித்து, கல்வியும் கொடுத்து, இன்று ஒரு குழந்தை நல மருத்துவராக சமூகத்தில் அடையாளம் காட்டி இருக்கிறார் என்றால் அது எல்லாராலும் சுலபமாக முடிகின்ற காரியம் அல்ல. மனம் விசாலமான, துணிவுள்ள சமூக அக்கறையுள்ள சிலரால் மட்டுமே முடியும் காரியம்.
தானும் மதரைப் போல் குறைந்த பட்சம் இல்லத்தின் ஒரு குழந்தையின் பொறுப்பையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நித்திலாவின் விருப்பம். இதைப் பற்றி முன்பே மதரிடம் கலந்து பேசி இருந்தாள். தன் முடிவில் இருந்து சற்றும் பின் வாங்கப் போவதும் இல்லை.
இவளது யோசனை இப்படியிருக்க மதரோ அவளிடம், "நித்தி, இப்போ தான் படிப்ப முடிச்சு இருக்கடா! அதுக்குள்ள பொறுப்பு பற்றி பேசணுமா? கொஞ்சம் நாள் ஆகட்டும். சூழ்நிலை, சந்தர்ப்பம் பார்த்து செய்து கொள்ளலாம். அதுவரை வாழ்க்கையை அதன் போக்குல நகர்த்தி கொண்டு போம்மா!" என்று புன்னகையுடன் கூறினார்.
ESTÁS LEYENDO
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romance"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...