அன்று காலையில் கேசவ் சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் அம்ருதா குரூப் ஆஃப் கம்பெனிகளின் ஜிஎம்மை போனில் அழைத்தான்.
"மிஸ்டர் பாஸ்கர்..... ஐ'ம் கேசவ் பிந்த்ரா ஸ்பீக்கிங்.....!" என்ற கம்பீரமான அவன் குரலில் எதிர் முனையில் இருந்தவர் சற்று ஆட்டம் கண்டு தான் போனார்.
"ஸார்..... இந்த மாச கம்பெனி விஸிட்டுக்கு இன்னும் நாலு நாள் இருக்கு. நானே உங்களுக்கு ரிமைண்ட் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா நீங்களே அதுக்குள்ள கூப்பிட்டீங்க. இன்னும் ஃபோர் டேஸ் டைம்ல அக்கவுண்ட்ஸ் எல்லாம் ப்ராப்பரா ரெடி பண்ணிடலாம் ஸார்!" என்று சொன்னவரிடம் உச்சுக் கொட்டி,
"உங்க சின்ஸியாரிட்டியை பார்க்கும் போது எனக்கு கண்ணெல்லாம் கலங்குது மிஸ்டர் பாஸ்கர்..... பட் இன்னிக்கு ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் நான் மும்பை கிளம்பிட்டேன். நான் வெரிஃபை பண்ணின வரைக்கும் டைல்ஸ் கம்பெனியில ஸ்க்ராப் வேல்யூ ரெண்டு மூணு மாசத்துக்குள்ள 10% அதிகமா இருக்கே மிஸ்டர் பாஸ்கர்..... தீபன் ஸாரோட கம்பெனில டைல்ஸ் பிஸினஸ்ல ஒரு டைல் கூட என் கணக்குல இருந்து மிஸ் ஆகக் கூடாது. ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல ஒரு பீஸ் ஆஃப் கேக் வெவல் லேண்ட் கூட என்னை தாண்டி வெளியே போகக்கூடாது. மத்த பிஸினஸ்ல கூட அப்படித்தான்...... ரெண்டு விளையாட்டு பசங்க பணக் கொழுப்புல பிஸினஸ் பண்றோம்ங்குற பேர்ல விளையாண்டுட்டு இருக்காங்க. கொஞ்சம் அப்படி இப்படி அக்கவுண்ட்ஸ்ல நம்ம வேரி பண்ணினா அவங்களுக்கு என்ன தெரியவா போகுதுன்னு நம்ம ஆபிஸ்ல யாரோ பேசிக்கிட்டாங்கன்னு எங்கிட்ட வந்து ஒரு பட்சி சொல்லுச்சு. அது யார்னு விசாரிச்சு அவர் கிட்ட ஒரு இன்பர்மேஷன் சொல்லிடுங்க பாஸ்கர்...... தீபன் ஸார் கண் முன்னாடி யாராவது தப்பு பண்ணினா தார் டெஸர்ட் இருக்குல்ல தார் டெஸர்ட்..... அங்க தூக்கிட்டு போய் ரெண்டு மூணு நேரம் தப்பு பண்ணினவங்கள விட்டுட்டு வந்துடுவாங்க. பகல் நேரம்னா தோலை எரிக்குற அளவுக்கு வெயில் இருக்கும். ராத்திரி நேரம்னா எங்க இருக்கோம், அடுத்த அடி பள்ளத்துக்குள்ள விழுவோமா ஒழுங்கா நடப்போமாங்கிற குழப்பம் வரும்.... இதுக்கு மேல மணல் புயல் பிரச்சனை வேற...... குறு மணல் எல்லாம் லங்க்ஸ்க்குள்ள போச்சு! ஆள் காலி, த்ரீ டேஸ் டைம்...... அதுக்குள்ள நீங்க மும்பைக்கு கொண்டு வர்ற அக்கவுண்ட்ஸ்ல எல்லா மிஸ் மேட்ச்சும் மேட்ச் ஆகியிருக்கணும். இல்லன்னா போட்ட டிக்கெட்ல இருக்கிற பேர் வச்ச ஆளை ராஜாஸ்தானுக்கு அஃபிஷியல் ட்ரிப்ங்கிற பேர்ல கிட்னாப் பண்ண வேண்டியதிருக்கும். நாம சீக்கிரத்துலயே மீட் பண்ணலாம் மிஸ்டர் பாஸ்கர்!" என்று எதிர் முனையில் இருந்தவரை பேச இடமே கொடுக்காமல் பேசி அவனே முடித்து விட்டு ஒரு சிரிப்புடன் உட்கார்ந்து இருந்த கேசவிடம்,
CZYTASZ
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romans"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...