💙 ஓவியம் 46

6.6K 225 47
                                    

அன்று காலையில் தீபன் எழுந்திருக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக காணப்பட்டான். மிகவும் சந்தோஷமாக இருந்தவனை மனைவியின் குமட்டல் ஒலி நிதானத்திற்கு கொண்டு வந்தது. மனைவியிடம் சென்று அவள் தலையை மெதுவாக பிடித்து வருடி விட்டான். நித்திலாவின் முகத்தில் அயர்ச்சி தெரிந்தது. தன்னை பற்றுக்கோடாக பற்றிக் கொண்டு சாய்ந்து நின்றவளை கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலில் கிடத்தினான்.

"கொஞ்சம் பால் குடிச்சிட்டு படுத்துக்கோ பேபி!" என்றான் கெஞ்சலுடன்.

"வேண்டாம் தீபு! மறுபடியும் வாமிட் வரும்!" என்று சொல்லி அவனை பயத்துடன் பார்த்தவளிடம்,

"ப்ளீஸ் நிது! வாமிட் பண்றதுக்காவது உடம்பில ஸ்டெமினா வேணும்ல? ரொம்ப தர மாட்டேன். கொஞ்சம் தான்!" என்று தன் மனைவியை மழலையாக மடியில் ஏந்திக் கொண்டு லஷ்மிமாவிடம் பால் வாங்கி புகட்டினான் தீபன்.

"இன்னிக்கு ஒரு ஆப்பரேஷன் இருக்கு தீபு! கொஞ்சம் சீக்கிரம் போகணும்பா!" என்று முணங்கியவளிடம்

"இப்போ ஒழுங்கா படுத்து தூங்குறியா? இல்லன்னா ஹாஸ்பிடலை ரெனோவேட் பண்ணனும்னு ரீசன் சொல்லி அத 15 டேஸ் இழுத்து மூடட்டுமா நித்திலா? முதல்ல உன்னையும், குழந்தையையும் பாரு! அதுக்கப்புறம் எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்! நான் ஜாகிங் போயிட்டு வந்து உன்னை எழுப்பி விடுறேன். ஏதாவது வேணும்னா இண்டர்காம்ல கூப்பிடு!" என்று சொல்லி விட்டு தன் அறைக்கு வெளியே வந்தான் தீபன்.

ராமநாதன் தன் கையில் ஒரு பார்சலுடன் வந்ததும் தீபன் அவரிடம், "இன்னும் அவளுக்கு தெரியாது மாமாஜி, நான் சொல்லலை. அதனால நீங்களும்......ப்ளீஸ்!" என்றவனிடம் சிரிப்புடன் தலையசைத்து விட்டு விடை பெற்றார் ராமநாதன்.

தீபன் கேசவை அழைத்து இன்று மாலை வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.

"என்ன பையா திடீர்னு? என்ன ஸ்பெஷல்?" என்று கேட்ட தன் தம்பியிடம்

எந்தன் உயிர் ஓவியம் நீ✔Où les histoires vivent. Découvrez maintenant