வைஷு அய்யம்
அத்தியாயம் 7
மதியம் ஒன்றரை மணி அளவில் கேசவும், தீபனும் மதிய உணவை திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். இடையிடையே தீபன் அரைக் கண்களில் நித்திலாவை அளந்த படி கேசவிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
காலையில் இரண்டு இட்லி, 11 மணிக்கு ஒரு டம்ளர் பாலுடன் கேசவிடம் சென்று அவனது பெர்த்தில் படுத்துக் கொள்வதாக அனுமதி கேட்டு
கிட்டத்தட்ட பட்டினி கிடந்த அவளைப் பார்த்து தீபனுக்கு நிஜமாகவே கோபம் வந்தது.
அவள் இன்னும் கீழே இறங்கி வருவதாகயில்லை.....மதிய உணவுக்கும் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கவனித்ததும் கேசவிடம் தீபன் 3 லன்ஞ்ச் ஆர்டர் செய்ய சொன்னான். அப்போதும் கேசவ் தன் அண்ணனிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. தீபனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து விட்டு அவன் சொன்ன வேலையை செய்து முடித்தான்.
சாப்பிடும் போது தீபனுக்கு அவளை விட்டு சாப்பிடுகிறோமே என்று குற்றவுணர்வு எழுந்தது. "முதல்ல உனக்கு ஊட்டி விட்டுட்டு அப்புறம் தான் நான் சாப்பிடணும். ஸாரிடா நிதி பேபி! ட்ரையினா போச்சு; அதனால தான் யோசிக்கிறேன். இருடீ! நான் சாப்பிட்டு வந்து உன்னை கவனிச்சுக்குறேன். ஸெட்ல அத்தனை பேரை என் ஒரு பார்வையால கன்ட்ரோல் பண்ணுவேன்! ஆனா இங்க உன் ஒருத்திய என்னால சமாளிக்க முடியலையே பேபி?" என்று மனதிற்குள் அவளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான்.
பிற்பகல் இரண்டு மணியளவில் வண்டி கிராஸிங்கிற்காக ஸ்டேஷனில் நின்றதும் நித்திலாவிற்கு மூச்சடைப்பது போல் தோன்றவே, கீழே இறங்கினாள். வெளியே சென்று கீழே இறங்கியவள் கதவின் அருகிலேயே தான் நின்றாள்; அதுவும் பயந்து கொண்டே தான்!
தீபனின் கண்களை சந்திக்க அவளுக்குத் தைரியம் இல்லை. அதனால் தான் மதிய உணவை மறுத்து இருந்தாள். நீ வருந்தினால் என்னால் தாங்க முடியவில்லை என்றானே?
YOU ARE READING
எந்தன் உயிர் ஓவியம் நீ✔
Romance"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இ...