💟 ஜீவாமிர்தம் 5

4K 145 44
                                    

ஜீவாவின் அருகில் வந்த நிர்மலாவை மேலும் கீழும் பார்த்தவன், "கையில அடிபட்டப்போவாச்சும் உங்களுக்கு என் நியாபகம் வந்துடுச்சே. தேங்க் காட்!" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

"நந்தும்மா....ப்ளீஸ் அம்மாவை தப்பா நினைக்காத கண்ணா; ஒரு வாரம் மாணிக்கம் தாத்தாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி சஹாயனுக்கு போக வேண்டியதாகிடுச்சு. அடுத்த வாரம் நம்ம பண்ணையில வேலை பார்க்குறவங்க வீட்டு கல்யாணம்! ரெண்டையுமே அவாய்ட் பண்ண முடியலடா அப்பு! எனக்கு கார் ஓட்ட தெரிஞ்சா கூட நானே இங்க கிளம்பி வந்துடுவேன். ஆனா அதுவும் தெரியாதுல்ல....!" என்று சொன்ன தன் தாயிடம்,

"கார்ல ஏறி பத்து நிமிஷத்துல தூங்கிடுவீங்க. இந்த அழகுல நீங்க ட்ரைவ் பண்ணி மலையில இருந்து வர்றதா..... ஸப்போஸ் இனிமே ட்ரைவிங் கத்துக்கிட்டாலும் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்க கூடாது. என் மேல ப்ராமிஸ்மா!" என்று சொல்லி தன் தாயின் கையைப் பற்றிக் கொண்டவனிடம்,

"அம்மா ஊட்டி விடட்டுமா கண்ணா?" என்று கேட்டவரிடம், "அதுக்கு தான்மா இவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்!" என்றான் ஜீவா தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு.

"உன் இடது கை நல்லா தானே இருக்கு. அண்ணி ஒரு ஸ்பூன் கொண்டு வாங்க. இந்த தடியன் அதுல அள்ளி வாயில வைப்பான்!" என்று முறைத்த படி ஜீவாவின் அருகில் வந்தமர்ந்த கீதாவிடம்,

"என்ன கீதும்மா! ஜீவா குட்டி மேல உனக்கு என்னடா கோபம்?" என்று எழுந்து தன் அத்தையின் முகத்தில் மூக்கால் உரசியவனை தூரத்தில் நின்று ஆசையுடன் பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

ஜீவானந்தன் பிறந்ததில் இருந்தே தன் அன்னையை விட அத்தைகள் இருவரிடமும் தான் செல்லம் கொஞ்சுவான். சென்னை வந்ததற்கு பின்னர் தனிமை தாக்கும் நேரம் எல்லாம் பலராமின் வீட்டுக்கு தான் சென்று படுத்துக் கொள்வான். மீராவையும், அர்ஜீனையும் மிகவும் பிடிக்கும் என்றாலும் கவியை மனதில் வைத்து சற்று தள்ளி தான் நிற்பான். ஆனால் பார்கவிடம் எவ்வளவு நட்புடன் இருக்கிறானோ அதே அளவு நெருக்கத்தை கீதா அத்தை, ராம் மாமாவிடமும் காட்டுவான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now