"ம்மா என் மேல உங்களுக்கு என்னம்மா கோபம்..... ஷைலு மேரேஜ்க்கு எல்லாம் ஓடி ஓடி ப்ளான் பண்ணிட்டு நான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொன்னதும் அப்செட் ஆகி தனியா வந்து உட்கார்ந்துட்டீங்க? நீங்க ரிலாக்ஸ் ஆகறதுக்கு நான் என்னம்மா பண்ணனும்?" என்று கேட்டபடி தோளில் சாய்ந்து கொண்ட தன் மகனின் சிகையை வருடிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார் நிர்மலா.
"ம்ம்ம்மா......" என்று சிணுங்கி எரிச்சல் பட்டவனை பார்த்து புன்னகைத்தவர், "உனக்கும் கவிக்கும் கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷம் நந்து, ஆனா இப்படி திடீர்னு ஒண்ணுமே ஏற்பாடு செய்யாம நடந்தது தான் கொஞ்சம் கவலையா இருக்கு. நம்ம வீட்ல உங்க கேங் பசங்க எல்லாரையுமே நீங்க நினைச்சா அடுத்த நிமிஷமே அந்த பொருள் உங்க கையில இருக்கிற மாதிரி சூழ்நிலையை குடுத்து தான் வளர்த்துருக்கோம். கவி உன் வொய்பா எந்த நிலைமையிலயும் நந்துவை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நிமிஷம் கூட ஃபீல் பண்ணிடக் கூடாது. உன் ஸாகரி க்ரானி அடிக்கடி அப்பாட்ட ஒரு வார்த்தை சொல்லுவாங்க அவளையும் கஷ்டப்படுத்திடாம நீயும் கஷ்டப்படாம இருன்னு.... அதே தான் நானும் உனக்கு சொல்றேன்!" என்று சொன்ன தன் தாயிடம் சிரிப்புடன்,
"அவ ஏம்மா கஷ்டப்பட போறா? மூக்கி.... அந்த இளவரசிய தாங்குறதுக்கு தான் அஜு, ராம், பாகி, ராகவ், பண்ணயாரு போதாக்குறைக்கு அவ புருஷன் ஜீவானந்தன் இத்தன பேரு இருக்கமே...... எவ்வளவு லவ்வை உள்ளுக்குள்ளயே வச்சுட்டு எங்கிட்ட காட்டாம நடிச்சுட்டு இருந்துருக்கா தெரியுமாம்மா...... என்னைய அளவுக்கு அதிகமா கஷ்டப்படுத்தறவளும் அவ தான், அளவேயில்லாம என்னைய காதலிக்குறதும் அவ தான்! காலேஜ் படிக்கிறப்போ எல்லாம் அவ என்னை ஒரு பார்வை பார்த்தாலே அன்னிக்கு பூராவும் ஜாலியா இருக்கும்மா..... எப்படா மறுபடியும் எல்லார் கூடவும் ஒண்ணா சேருவோம்னு நினைச்சு, நம்ம வீட்டுக்கும் வந்த பிறகு திடீர்னு என்னை கல்யாணம் பண்ணிக்குறியா ஜீவான்னு அவ கேட்டது ஏதோ ஒரு ஃபேண்டஸி வேர்ல்டுல இருந்த மாதிரி ஒரு உணர்வும்மா; ஓகே திஸ் இஸ் த ரைட் மொமண்ட்ன்னு தோணுச்சு, செய்றது தப்புன்னு தெளிவா தெரியுது, இருந்தாலும் கவிப்ரியாவா நம்ம கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கேக்குறான்னு நினைச்சு அப்படி ஒரு சந்தோஷம்...... அத எப்படி உங்க கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்றது? ரோலர் கோஸ்டர்ல போறப்போ திடீர்னு நம்ம உட்கார்ந்து இருக்குற கம்பார்ட்மெண்ட் மட்டும் அப்படியே வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டா எப்படி இருக்கும், அந்த மாதிரி இருந்ததுமா!" என்று சொன்ன தன் மகனிடம் புன்னகையுடன்,
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...