அவனது கடையில் அமர்ந்து இருந்த ராசுவுக்கு தன் நிலைமையை நினைத்து சிரிப்பும், அழுகையும் சேர்ந்து வந்தது. அவனது மனைவியை அம்பைக்கு அழைத்து வந்ததிலிருந்து அவளை மாமா என்று ஒரு முறையாவது கூப்பிட வைத்து விட வேண்டும் என்று அவனும் ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் என்ன முயற்சி செய்தாலும் பலன் தான் கிடைத்த பாடில்லை.
"எவ்வளவு கொழுப்பு இருந்தா மிஸ் இனியான்னு கூப்பிட்டதும் எஞ் சட்டையை புடிச்சு ரெண்டு உலுக்கு உலுக்காம நல்லாத்தேன் இருக்குன்னு சொல்லுவ; மாமன் உன்ன மரியாதையா பேசினா உனக்கு எரிச்சல் வருதுல்ல..... அப்படித்தான்டீ நீ யார் கிட்டயோ பேசுற மாதிரி எங்கிட்ட பேசினா எனக்கும் எரியுது. திடீர்னு விருந்தை பத்தி எதுக்கு பேசினா.....? சிட்டுக்குருவி நம்ம கிட்ட எதுவும் கோக்குமாக்கு பண்றாளான்னு தெரியலையே? என்னத்தையோ பேசணும்னு கூப்பிட்டா, அவ பேசுறத கேக்கையில சிரிப்பாதேன் வருது. ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாதுடீ என் கண்ணாட்டி! இரு படிப்பை முடிச்சுட்டு அப்புறம் இங்கண வருவேல்ல..... அப்போ ஒன்னைய நல்லா ஏறி மேயுறேன்!" என்று குப்புறக் கவிழ்ந்து முணுமுணுத்துக் கொண்டு இருந்தவனிடம்,
"த்தூ..... ஏறி மேயுற மொகரையைப் பாரு! முதல்ல உன் பொஞ்ஜாதிய ஊரறிய உன் பொஞ்ஜாதின்னு சொல்ல வைக்குத வழியப் பாருலே; அம்பையில வண்டியை நிறுத்த ஆலங்குளத்திலயே ப்ரேக் அடிச்சுட்டு உனக்கெதுக்குலே வெட்டிப் பகுமானம்?" என்று அவன் மனசாட்சியே கேவலமாக அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க தலையை உலுக்கிக் கொண்டு தன் கைகளை பின் புறம் கோர்த்து சேரில் சாய்ந்து படுத்திருந்தான் இசக்கிராசு.
"ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீங்க. இப்படி படுத்துட்டு போஸ் குடுக்கறது தான் அந்த வேலையா?" என்று கேட்ட படி உள்ளே வந்து அமரப் போனவளை தடுத்தவன்,
"எப்டி வந்தீக? என் கிட்ட சொன்னா நா வந்து கூட்டிட்டு வந்து இருப்பேன்ல?" என்று கேட்ட படி எழுந்து அவன் அமர்ந்து இருந்த நாற்காலியை கை காட்டி, "இங்கண உட்காருங்க!" என்றான்.
ESTÁS LEYENDO
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...