💟 ஜீவாமிர்தம் 43

2.3K 138 55
                                    

பார்கவின் திருமணம் முடிந்து இரண்டாவது நாள் மாலையில் சென்னையில் பலராமின் இல்லம் ஜீவானந்தனின் வருகையால் சந்தைக் கடை போல் மாறியிருந்தது. அவனைப் பார்த்ததும் பார்கவும், ராகவும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டனர்.

"டேய் மண்டை வீங்கி, வீடியோ சாட்ல பாக்குறதை விட அழகா இருக்கடா! யூ ஆர் லூக்கிங் ஹேண்ட்சம் மேன்!" என்று அவனுடன் ஹைஃபைவ் கொடுத்து கொண்டான் ஜீவா. பின் தன் நண்பன் பார்கவிடம் சென்று,

"கங்க்ராட்ஸ்டா பாகி அபி உனக்கும் தான்மா, ஹாப்பி மேரீட் லைஃப்!" என்று ஜீவானந்தன் அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு அபிநய சரஸ்வதியிடம் புன்னகையுடன், "அபிநயா வெல்கம் டூ அவர் பேமிலி; ஹோப் யூ வில் என்ஜாய் திஸ் எண்விரோண்மெண்ட்..... இல்லன்னாலும் வேற வழியில்ல, ஜோதியில ஐக்கியமாயிடுங்க!" என்று சொன்னவனிடம் அவள் "எனக்கு நம்ம வீடு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா!" என்றாள். அவன் புன்சிரிப்புடன் தன் கையில் வைத்திருந்த ஒரு பத்திரத்தை பார்கவிடம் நீட்டினான்.

"மேரேஜ் கிப்டா.....என்னடா இது? ஏதோ டாக்குமெண்ட் மாதிரி இருக்கு?" என்று கேட்ட தன் நண்பனிடம்,

"உங்க மாமா கல்யாணத்துக்கு ரகு பாட்டா கொடுத்த கிப்டை அவர் அப்படியே உனக்கு ரிட்டர்ன் பண்றாருப்பா. நம்ம பூம்பாறை ப்ராப்பர்ட்டீஸ் எல்லாம் உனக்கும், ராகவ்க்கும், உங்க வீட்ல இன்னொரு அராத்து இருக்குமே அதுக்கும் பிரிச்சு எழுத சொல்லிட்டாங்க. உங்க கல்யாணத்துக்கு வராததால டாக்குமெண்ட்டை கொண்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வட்டி எல்லாம் கேக்காதீங்கப்பா, அதெல்லாம் குடுக்க முடியாது! தாத்தா பாட்டி என்ன பார்த்துட்டு இருக்கீங்க..... வாங்க வந்து கப்பிள்ஸை ஆசிர்வாதம் பண்ணி இதை குடுங்க!" என்று ஜெயந்தனையும் பத்மாவையும் அழைத்தான் ஜீவானந்தன். ஜெயந்தன் பத்மா இருவரும் பத்திரத்தை பார்கவிடம் கொடுக்க பார்கவ் அபிநயாவுடன் சேர்ந்து அதைப் பெற்றுக் கொண்டான். ஜெய் நந்தன் நடக்கும் அனைத்தையும் சிறு சிரிப்புடன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். முன்பெல்லாம் அவ்வப்போது பேச்சுவாக்கில் தன் மனைவியிடம் சொல்வது தான்..... பூம்பாறை நிலங்கள் வீடு அனைத்தும் மீரா கீதாவின் பிள்ளைகளுக்கு தான் என்று; அதை நினைவில் வைத்து இருந்து சரியாக பார்கவின் திருமணப் பரிசாக மூவருக்கும் உரிமை உள்ள சொத்து என்று முத்தாய்ப்பாக சொல்லி தன் மகன் பார்கவ் கைகளில் சேர்த்தும் விட்டானே என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now