💟 ஜீவாமிர்தம் 72

1.7K 87 7
                                    

"சரஸ் நான் கொடைக்கானல்ல தான் இனிமே செட்டில் ஆகிடலாம்னு நினைக்கிறேன். ராமும், கீதாவும், அபியும், பார்கவும் உன்னை பத்திரமா பார்த்துக்குவாங்க. எதைப் பத்தியும் ரொம்ப யோசிக்காம உடம்பை பத்திரமா பார்த்துக்க சரஸ்..... எனக்கும், ராம்க்கும் நீ எப்பயுமே வேணும்!" என்று சொன்ன தன் மூத்த மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

"அஜு இவ்வளவு வருஷம் நான் குழப்பத்திலயே இருந்தாலும் ராஜேஷ் எங்கேயோ கண் காணாத தூரத்தில இருக்கார்னே நினைச்சு புலம்பி உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தி இருக்கேன். பெத்தவங்கள அன்பா தாங்குற பசங்க, பாட்டிய சமாளிக்க பொய் சொல்றேன்னு சொல்ற பேரப் புள்ளைங்க, ப்ரெண்டு மாதிரி என்னை முகம் சுளிக்காம பார்த்துகிட்ட அபி இப்படி சொந்தம் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு இங்க இருக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு அஜு, அதுனால நானும் உங்கூட அங்க வந்துடட்டுமா?" என்று கேட்ட சரஸ்வதியிடம் மீரா கைகளைப் பற்றி,

"உங்களுக்கு எங்க இருந்தா சந்தோஷமா இருக்குமோ அங்க இருங்க அத்தை; ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டு போயிட்டா போச்சு; நீங்க என்ன சொல்றீங்க ராம்?" என்று ராமிடம் அபிப்ராயம் கேட்க அவரும் தன் அண்ணி சொன்னதையே திரும்ப சொன்னார்.

"யேய் சரஸ் அதெல்லாம் கிடையாது நீ எங்கயும் போகக்கூடாது பார்த்துக்க...... இங்க என்ன குறை உனக்கு? பெரியப்பா கூட நீ கிளம்பி போய்ட்டா எனக்கு..... நான் உன்னை மிஸ் பண்ணுவேன் சரஸ்!" என்று குதித்த பார்கவை கீதாவும் அபிநயாவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்.

"எனக்கு ஒரு சேன்ஜ் வேணும்னு தோணுதுடா கண்ணா, நான் அஜு வீட்ல இருந்தாலும் மாசம் ஒரு தடவ இங்க வந்துட்டு போறேன். அபி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, இனிமே உன் பொண்டாட்டியோட டையத்த நான் திருடிக்க மாட்டேன். அவள நல்லா பார்த்துகிட்டு நீயும் சந்தோஷமா இரு!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரை பார்த்து விட்டு தன் கணவனை ஓரமாக தள்ளி கொண்டு சென்றார் கீதா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Opowieści tętniące życiem. Odkryj je teraz