நள்ளிரவு நேரத்தில் மாடியில் நின்று கொண்டு இருந்தாள் ஷைலஜா. பார்கவ் அவளுக்கு இரண்டடி தள்ளி நின்று கொண்டு அவளை முறைத்தவாறு நின்றிருந்தான்.
"என்ன அத்தான், பேசணும்னு உன்னைய இங்க கூட்டிட்டு வந்தா, என்னைப் பார்த்து இப்படி முறைச்சுட்டு இருக்க..... பயமாயிருக்குல்ல!" என்று சொன்னவளிடம் ஆச்சரிய பாவத்துடன்,
"அப்பப்பா.... நீ ரொம்ப பயப்படுறவ தான்; இந்தா உனக்கும், இனியாவுக்கும் இந்த மாச பாக்கெட் மணி; ஷாப்பிங்க்கும் சேர்த்து இவ்வளவு தான்! குடுக்கறதுக்கு அதிகமா தானம் பண்ணிட்டு அப்புறம் உன் செலவுக்காக பணம் இல்லைன்னு பாகி அத்தான்னு கூப்பிட்டு போன்ல பல்லை காட்டின..... தோலை உரிச்சுடுவேன்; பிடி!" என்று சொல்லி விட்டு ஐநூறு ரூபாய் தாளை அவள் முன்பு நீட்டினான் பார்கவ்.
ஜெய் நந்தனும், நிர்மலாவும் தங்கள் பெண்களுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை தான் எப்போதும் தருவர். கேட்பதை வாங்கிக் கொடுத்தாலும் அதிக அளவில் பணம் புழங்குவதை தந்தை, தாய் இருவருமே ஆதரித்ததில்லை. என்ன வேண்டும் என்றாலும் எங்களிடம் கேள்; நாங்கள் வாங்கி தருகிறோம் என்று தான் சொல்லி விடுவார்கள். ஆனால் ஜீவானந்தன் தான் பார்கவிடம் பேசி தன் தங்கைகள் இருவருக்கும் ஓர் அவசரத் தேவைக்காவது இருநூறு, முந்நூறு ரூபாயாவது கையில் இருக்கட்டும், நம் கவி, ஷைலு, இனியா மூவரும் பணத்தை அவர்கள் தவறாக செலவு செய்து விட மாட்டார்கள் என்று நண்பனிடம் பரிந்துரை செய்திருந்தான்.
"பிடிடீ, பணத்தை கையில வச்சுட்டு எவ்வளவு நேரம் நிக்கறது?" என்று எரிச்சலுடன் கேட்டவனிடம், "நான் இப்ப உன்னைய பணம் கேக்குறதுக்காக ஒண்ணும் கூட்டிட்டு வரல. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!" என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தவளிடம் ஓர் மர்ம புன்னகையுடன்,
"என்னடா ரூபி காலேஜ்ல எவனாவது பிரச்சனை பண்றானா...... நீ தான் உயிர்; நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல..... இப்படி ஏதாவது உளறிட்டு இருக்கானுங்களா.....?" என்று கேட்டவனிடம் மௌனமாக நின்று கொண்டு தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள் ஷைலஜா.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...