💟 ஜீவாமிர்தம் 34

2.4K 139 42
                                    

                     Disclaimer

பட்டங்கள் ஆள்வதில், சட்டங்கள் செய்வதில் வேண்டுமானால் ஆண்களுடன் பெண்கள் சரிசமமாகலாம். ஆனால் மது, புகை போன்ற சமூக சீரழிவுக்கு காரணமான போதைகளிலும் அவர்களுக்கு இணையாக வேண்டும் என்றால்.....

தான் பழகும் பழக்கம் தன்னை அடிமையாக்கி உடல்நலத்தையும் கெடுத்து சமூக மரியாதையையும் சீர்குலைத்து விடும் என்று தெரியாமல் வெறும் ஆர்வக்கோளாறால் விட்டில் பூச்சிகள் விளக்கருகில் நெருங்குவது போல் போகும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பதிவு. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த விதமான போதைப்பழக்கமும் மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

மாலையில் ஜெய் நந்தன் நிர்மலாவுடன் சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டு தன் தேநீரை அருந்திக் கொண்டு இருந்தார். கோல்ப் க்ளப், நண்பர்கள் பார்ட்டி என்று வரிசை கட்டி கொண்டு  ப்ரோக்ராம்கள் இருந்தாலும் ஞாயிறு மாலை வீட்டை விட்டு எங்கும் அசைய மாட்டார். நிர்மலாவின் முகம் சற்று வாட்டமாக இருப்பதை காண சகியாமல்,

"நிலாக்குட்டி அப்போலேர்ந்து அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லும்மா, மாப்பிள்ளை ஓகே தானே? உன்னை தவிர வீட்ல எல்லாரும் டபிள் ஓகே சொல்லிட்டாங்க. நீ தான் அமைதியாவே இருந்து என் ப்ளட் பிரஷரை ஏத்திட்டு இருக்க. வாயை திறந்து பேசேன்டீ!" என்று கெஞ்சலில் ஆரம்பித்து கடுப்புடன் முடித்தார்.

"ஹாய்ப்பா உங்க கூட நானும் ஜாய்ன் பண்ணிக்கலாமா? மே ஐ சிட் ஹியர்?" என்று கேட்ட படி தன் தந்தையின் அருகே அமர்ந்து அவர் கோப்பையை பற்றி அவர் குடித்து கொண்டு இருந்த பாதி தேநீருடன் இன்னும் கொஞ்சம் ப்ளாஸ்க்கில் இருந்து எடுத்து ஊற்றி தன் கைகளில் வாங்கிக் கொண்டான் ஜீவானந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now