"டேய் எருமை மாடு காலங்கார்த்தால வந்து ஏன்டா என்கிட்ட இம்சை பண்ணிட்டு இருக்க..... இது உங்கம்மா எனக்கு போட்டு விட்ட செயின்.... இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு தடவ தான் இதை கழுத்துல இருந்து கழட்டியிருக்கேன். அதுவும் வேற யாரு கையிலயும் குடுக்காம நானே அத சரி பண்ணிக்கறதுக்கு தான்; இப்போ இந்த செயின் எதுக்கு உனக்கு வேணும்னு கேட்டு என் உயிரை வாங்கிட்டு இருக்க?" என்று தன் மகனிடம் எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் பலராம்.
"ஏன் எதுக்குன்னு விளக்கமெல்லாம் அப்புறமா சொல்றேன். உனக்கு அம்மா போட்ட செயினை நாளைக்கு இல்லல்ல இன்னிக்கு நைட் பத்திரமா உன் கையில குடுத்துடுவேன். இப்போ அத எங்கிட்ட குடுப்பா!" என்று கேட்டான் ராகவ்.
"எதுக்கு உன் செயினை கேக்குறான்னு தெரியல. ஓவரா பண்ணாம புள்ள கிட்ட செயினை குடேன் ராம்!" என்று தன் மகனுக்கு பரிந்து கொண்டு வந்த தன் மனைவியை முறைத்தார் பலராம்.
"ஓகே ஓகே கூல் அப்பா நீ செயினை இப்பவே தர வேண்டாம். ஈவ்னிங் பங்ஷன்க்கு ஹாஃப் அன் ஹவர் முன்னாடி என் கிட்ட தந்தா போதும். எப்படியும் பங்ஷன்க்கு வர்றவங்க எல்லாம் காஸிப்பிங்க்கு ரெடியா விதவிதமான கதையோட வருவாங்கல்ல; ஸோ அவங்க வாயை ஆஃப் பண்ணி வைக்குறதுக்கு ஏதாவது வேலை குடுக்கணுமே..... வர்றவங்க எல்லாரும் உன்னோட காணாம போன செயினை தேடப் போறாங்களாம். ஆனா உன்னோட செயின் பத்திரமா என் பாக்கெட்ல தான் இருக்கப் போகுது. உன் செயினை கண்டுபிடிச்சு தர்றவங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கிப்ட் வேற அனௌன்ஸ் பண்ணப் போறாரு நம்ம மச்சி!" என்று சொன்ன தன் மகனிடம்,
"உங்க விளையாட்டுக்கு இன்னிக்கு என் செயின் தான் கிடைச்சதாடா..... அத நானே நீ சொல்லும் போது கழட்டி என் கிட்டயே பத்திரமா வச்சுக்குறேன். நீ ஜீவாட்ட போய் சொல்லிடு! சரி நேத்து பங்ஷன்ல அவனும் உன் அக்காவும், ஒரு மாதிரி டல்லா இருந்துச்சுங்க. என்னாச்சு.... மறுபடியும் எதுவும் சண்டை போட்டுச்சுங்களா? உனக்கு எதுவும் தெரியுமாடா?" என்று கேட்ட தன் தந்தையை யோசனையாக பார்த்த ராகவ்,
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...