இனியா, ராசுவின் பிரச்சனை முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. வீட்டில் ஒவ்வொருவரும் இனியாவை எவ்வாறு தேற்றுவது என்று தெரியாமல் ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவளை மேலும் துன்புறச் செய்து கொண்டிருந்தனர். அதில் முதலாவதும், முக்கியமானமானதுமான நபர் ஷைலஜா. இனியா மலைக்கு வந்ததும் அவளை அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் அப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாய் தன் கைப்பிள்ளையை இடுப்பில் இறுக்கிக் கொள்வது போல் தன் தோழியை இறுக்கிக் கொண்டாள்.
"லட்டு உன் மொபைலை குடுடீ....." என்று இனியாவிடம் போனை வாங்கி ராசுவின் அழைப்பு ஜெய் நந்தனுக்கு போகும் படி டைவர்ட் செய்து விட்டாள்.
"நமக்கு நடுவில வருவானாம்ல்ல....ராஸ்கல், எப்படி வர்றான்னு நானும் பார்க்குறேன்! ஏன்டீ அப்பா, அம்மா, அண்ணா, விவேக் சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அவனை தூக்கி போட்டு நாலு மிதி மிதிக்கணும்னு தோணல. உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானே.....
உனக்கு கூடவா அவனை எதுவும் செய்யணும்னு தோணல?" என்று கேட்ட ஷைலஜாவிடம்,"எல்லார் கிட்டயும் பேசும் போது ஒரு டஃப்னஸோட பேசுறான் ரூபி; என் கிட்ட மட்டும் பாவமா தலைய குனிஞ்சுட்டு பேசுறான். ஆனா நான் அவனை அடிக்காம சும்மா எல்லாம் விடல. அடிச்சேன் ரூபி; ஆனா எனக்கு தான் கை வலிச்சது. அவன் அதை என்ஜாய் பண்ணிட்டு இருந்தான்!" என்று இனியா சொல்ல ஷைலு தலையில் அடித்துக் கொண்டாள்.
ராகவும், பார்கவும் இனியாவுடன் பேசுவதற்கு கூப்பிட்ட பொழுது, "ரூபி ப்ளீஸ்டி.... அத்தான் கிட்ட எல்லாம் நான் பேசல! நீயே பேசு. எல்லாரும் அவனை திட்டறதை கேட்கும் போது எனக்கு அவன் மேல கோபம் கோபமா வருது!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் இனியா. ஷைலஜா பார்கவ், மற்றும் ராகவிடம் இனியாவுக்கு சற்று தனிமை தேவைப்படுகிறது, இப்போது அவள் அறிவுரை, ஆலோசனை எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்று புரிய வைத்து விட்டு ராகவிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...