💟 ஜீவாமிர்தம் 74

1.9K 86 8
                                    

"நம்ம பேமிலியில சின்னவங்க எத ஆசைப்பட்டு கேட்டாலும், அத பெஸ்டா குடுக்கணும்னு தான் பெரியவங்க நினைச்சுருக்கீங்க. அதே தான் இங்கயும் நடந்திருக்கு. இன்னிக்கு காலையில எழுந்திரிச்சதுல இருந்து எல்லா விஷயமும் மனசு ரொம்ப எதிர்பார்த்த மாதிரி விஷயமா இருக்கு. ஆனா அதெல்லாம் இப்படி ஒரே நாள்ல நடக்கும் போது எப்படி ரியாக்ட் பண்றதுன்னு கூட தெரியாம ஜெர்க் ஆகி நின்னுட்டு இருக்கேன். யூஸ்யுவலா ஒரு பொண்ணோட ட்ரீமை ஆப்டர் மேரேஜ்க்கு அப்புறம் சில நேரங்கள்ல அவளோட பேமிலி மெம்பர்ஸ் கண்டுக்காம விட்டுடுவாங்க. ஆனா என்னோட லைஃப்ல தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமா, எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு என்னோட விஷஷை நிறைவேத்தி வைக்குறீங்க...... உங்க எல்லாருக்கும் லாட்ஸ் அண்ட் லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ்! ஆனா தேங்க்ஸ்னு வெறும் வார்த்தையில சொன்னா எல்லாம் அவன் செஞ்சதுக்கு பத்தவே பத்தாதுங்கிற மாதிரி என் லைஃப்ல ஒருத்தன் இருக்கான். அவனோட மெயின் ஆம்பிஷனே நான் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்ங்கிறது தான்..... ஒரு பொண்ணுக்கு அவ ஹஸ்பெண்ட் கிட்ட இருந்து வேணும்ங்கிறது அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கற அவனோட புரிதல், அப்புறம் காதல், அதுக்கு மேல அவங்க ரெண்டு பேர் உறவுல இருக்கிற நம்பிக்கைய எந்த விதத்திலயும் அவன் உடைச்சுடக் கூடாதுங்கிற ஒரு எதிர்பார்ப்பு...... இதெல்லாம் தான்! ஆனா அதுக்கு மேல என் பேரை அவன் பேரோட சேர்த்து வச்சு அப்படி யாராவது கூப்பிட்டா சந்தோஷப்படுற பைத்தியம் அவன்....... நான் அவனுக்கு லவ் யூ எல்லாம் சொல்லப் போறதில்ல. ஏன்னா அது ஜஸ்ட் ஒரு வார்த்தை தான்! என் இயல்புல இருந்து என்னை கொஞ்சம் கூட விலக்காம எனக்கு வலிக்காம என் தப்பை எல்லாம் நான் யோசிக்க வச்சவன் அவன் ஒருத்தன் மட்டும் தான்..... ஒரு ஸ்டேஜ்ல நம்ம வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே என் மேல கோபமா இருந்தீங்க; அவன் மட்டும் தான் என் மேல கோபமும், வருத்தமும், ஆத்திரமும் காட்டாம அவன் நினைக்குறத எனக்கு உணர்த்திட்டான். இன்னிக்கு ஒரு பொட்டீக் ஆரம்பிச்ச சந்தோஷத்துல இதெல்லாம் உங்க கிட்ட ஷேர் பண்ணிக்குறேன்னு யாரும் நினைக்காதீங்க! ஜஸ்ட் பார் மை லேடி இல்லன்னா கூட நான் இதே சந்தோஷத்தோட தான் பேசியிருப்பேன். நான் அவனுக்காக இதுவரைக்கும் என் லைஃப்ல என் லிட்டில் பிங்கரை கூட அசைச்சதில்ல. என்னைப் போய் ஜீவாவுக்கு கிடைச்ச ஜீவாமிர்தம் கவிப்ரியா தான்னு சொன்னான். ஒண்ணுமே செய்யாம அவனை டார்ச்சர் மட்டுமே பண்ணிட்டு இருந்த என்னைய அவன் அமிர்தம்னு சொன்னான்னா யெஸ் அப்கோர்ஸ் எனக்காக தான் எல்லாம்னு இருந்த ஜீவா தான் என் ஜீவாமிர்தம்....... என்னை சமாளிக்க அவனால மட்டும் தான் முடியும். பட் உங்கிட்ட ஒரே ஒரு ஆப்ளிகேஷன் ஜீவா! இனிமே எந்த ஒரு சந்தர்ப்பத்திலயும் என் முன்னால கண்கலங்கி நிக்காத! உன் கண்ணுல கண்ணீரை வரவழைச்சதுக்கும், உன்னை இதுவரைக்கும் நிறைய தடவ ஹர்ட் பண்ணினதுக்கும் ரொம்ப ரொம்ப ஸாரி! ஜீவாட்ட மட்டுமில்ல நம்ம பேமிலி மெம்பர்ஸ் எல்லார்ட்டயும் ஸாரி கேட்டுக்குறேன். என்னோட பேச்சோ, என்னோட செயலோ உங்களை ஏதாவது மனசு வருத்தப்பட வைச்சிருந்தா ஸாரி...... என்னோட தப்பை எல்லாம் அவன் கண்ணுல கண்ணீரை பார்த்ததுக்கப்புறம் தான் நான் ரியலைஸ் பண்ணினேன்! எங்க கல்யாணத்தன்னிக்கு இருந்ததை விட இன்னிக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க எல்லார்ட்டயும் அப்பாலஜைஸ் பண்ணிட்ட பிறகு மனசு ரொம்ப லேசா இருக்குற மாதிரி ஃபீல் குடுக்குது. மிஸ்டர் சீஃப் கெஸ்ட், யூ மே பிரிஸைட் த பங்ஷன் நௌ!" என்று சொல்லி அவனை அழைத்தவள் பக்கத்தில் வந்து அவள் முகத்தை ஒரு முழு நிமிடம் இமைக்காமல் பார்த்து விட்டு கைகளைப் பெரிதாக விரித்தான் ஜீவானந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Tempat cerita menjadi hidup. Temukan sekarang