💟 ஜீவாமிர்தம் 10

3.5K 132 56
                                    

ஜீவாவும், கவிப்ரியாவும் கீழே சிறுபிள்ளைத்தனமாக உரிமை போராட்டம் செய்து கொண்டிருந்த போது மாடியில் அர்ஜுன் மீராவிடம் தன் மகளையும், மருமகனையும் குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்.

"என்னடா ரமி; ஜீவாவுக்கும், கவிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா அவங்களுக்குள்ள செட் ஆகுமான்னு தெரியலையேம்மா! நம்ம பொண்ணு எடுத்ததுக்கெல்லாம் அடாவடித்தனம் பண்ணிட்டு இருக்குறா. உன் ஜீவாக்குட்டி இதெல்லாம் தாங்குவான்ங்கிற?......" என்று கேட்ட தன் கணவனை இடுப்பில் கை வைத்து முறைத்த மீரா,

"மிஸ்டர் காண்டீபன், உங்க மகளுக்கு அத்தன பேரும் செல்லம் குடுத்து கொஞ்சிட்டு இருந்தா, அவ நம்ம தலை மேல தான் ஏறி உட்கார்ந்துகிட்டு இருப்பா. ஆனா கவிம்மா சொன்னா கேட்டுக்குற டைப் தான், அதிலயும் ஜீவா சொன்னா அவன் ஒரு தடவை சொல்றதை நாலு தடவை யோசிப்பா. ஒரு கல்யாணத்துல..... அது எந்த விதமான கல்யாணமா இருந்தாலும் சரி, எடுத்தவுடனே இரண்டு பேருக்குள்ள புரிதல் வரணும்னு நினைக்கிறது அபத்தமான விஷயம். அது மெல்ல மெல்லத் தான் நடக்கும். ஆனா கடைசியில ரெண்டு பேருக்குமான ஒரு அழகான பாண்டிங் கண்டிப்பா வந்துடும். அதனால நீங்க டென்ஷன் ஆகாம ஜீவா, கவி கல்யாணத்தை பத்தி அண்ணா கிட்ட பேசி முடிவெடுங்க. நம்ம வீட்ல இன்னும் ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்கன்னு அடுத்தடுத்து கல்யாண வயசுல பிள்ளைங்க ரெடியா இருக்காங்க! இல்ல உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்குற மாதிரி எதுவும் ஐடியா வச்சிருக்கீங்களா?" என்று கேட்டார் மீரா.

ஏம்மா..... உனக்கு என் மேல கோபம் ஏதாவது இருந்தா நீயே என்னைய ரெண்டு அடி அடிச்சிடு, சந்தோஷமா வாங்கிக்கறேன். அத விட்டுட்டு இப்படி இன்னொரு பையனை கவிம்மாக்கு மாப்பிள்ளையா பார்க்க சொல்லி உங்கண்ணன் கிட்டயும், அந்த லூசுப்பய கிட்டயும் என்னை மாட்டி விடாத. உங்கண்ணனாச்சும் கோபப்பட்டா ரெண்டு அடி தான் அடிப்பான். ஆனா இந்த ஜீவா பையன்...... எந்த நேரத்தில எப்படி இருப்பான்னே தெரியாது. ஸோ இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம். நம்ம ஷைலு, இனியா, பாகி, ராகவ் எல்லாம் சின்னப் புள்ளைங்கடீ..... அதுங்களுக்கு போய் கல்யாணம்னு பேசுறியே... டென்ஷன் ஆகப் போகுதுங்க!" என்று சொன்ன தன் கணவரிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now