ஜீவாவின் வருகையை அறிந்து பண்ணை வேலையாட்கள், சஹாயன் ஊழியர்கள், பூம்பாறையின் பெரிய தலைகள் அனைவரும் வந்து அவனைப் பார்த்து உரையாடினர்.
தனக்கு தெரிகிறதோ, தெரியவில்லையோ அத்தனை பேரிடமும் ஒரு முறுவலுடன் ஜீவா பேசிக் கொண்டிருந்தான். தன்னையும், தன் குடும்பத்தையும் மதித்து தனக்கு வரவேற்பு தர வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் முகம் வாடாமல் அவர்களின் அனுமதி கேட்டு இரு நிமிடம் மட்டும் வீட்டிற்குள் வந்து தன் தாத்தா, பாட்டி படத்தின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவன், அதற்கு பிறகும் வெளியே சென்று பொறுமையாக நின்று அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.
ஜெயந்தன் ஜெய்யை அவருடன் வெளியே அழைத்து சென்று, "இந்த வருஷம் பெரியவங்களுக்கு சாமி கும்பிடறதை ஒட்டி தான் பூம்பாறையில ஊர்திருவிழாவும் வருது. இந்த தடவை திருவிழாவுல முதல் மரியாதையை நீ ஏத்துக்கணும் நந்தா!" என்று சொன்னவரிடம்,
"இல்ல சித்தப்பா, என்னால முடியாது. ஒண்ணு நீங்க ஏத்துக்குங்க..... இல்லன்னா சின்னவருக்கு குடுங்க!" என்ற ஜெய்யிடம் யோசனையுடன்,
"என்னய்யா நீ இருக்கும் போது எப்படி நம்ம ஜீவாம்மாவுக்கு.......!" என்று தயங்கிய தன் சித்தப்பாவிடம்,
"ஒண்ணும் யோசிக்காதீங்க சித்தப்பா, எல்லாம் நல்ல படியா நடக்கும். இங்க பாருங்க....... எங்க ரகு தாத்தா எப்படி உங்க ஊர் நல்லது, கெட்டதெல்லாம் பார்த்துக்கிட்டாங்களோ, அதே அளவுக்கு இப்போ எங்க சித்தப்பா பார்த்துக்குறாங்க. இங்கயே வந்துட சொன்னாலும் தாத்தா பாட்டி இருந்த ஊரை விட்டு வர மாட்டோம்ன்னு சொல்லி பூம்பாறையிலயே இருக்காங்க. அவங்களை நீங்க ஏத்துக்க முடியும். ஆனா என் பையனுக்கு முதல் மரியாதை தரணும்னு எங்க சித்தப்பா நினைக்கிறாங்க. அதுக்கு உங்க ஊர்ல எல்லாருக்கும் சம்மதமான்னு எனக்கு தெரியணும். ஏன்னா என் தாத்தா எங்கிட்ட விட்டுட்டு போன எல்லாப் பொறுப்புகளையெல்லாம் நான் என் பையனுக்கு தான் குடுக்கப் போறேன்!" என்று ஜெய் நந்தன் உறுதியாக சொல்லி விட அனைத்து பெரியவர்களும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசி விட்டு ஜெய் நந்தனிடம் சம்மதம் தெரிவித்தனர்.
CZYTASZ
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romansபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...