அணிந்திருந்த formal சட்டை கசங்கி இருக்க தலை முடி களைந்து இருக்க கண்கள் ரத்த சிவப்பை ஏற்றி இருந்தது .அவனின் வாய் ஓயாது ஏதோ ஒரு வார்த்தையை உச்சரித்துக்கொண்டிருக்க கைகளிலிருந்து இதோடு பதினைந்தாவது சிக்ரெட் அவனின் கையை சுட்டு கீழே விழுந்தது .
திடீரென்று எழுந்தவன் எதையோ மறைக்கவோ அடக்கவோ போராடியவாறு கால்களை ஓங்கி அடித்தும் தலை முடியை அழுத்தி கோதியும் தனது தவிப்பை மறைக்க போராடிக்கொண்டிருந்தான் .
அவனின் எண்ணவோட்டத்தை தடைப்படுத்த வேண்டி அவனது அலைபேசி சினுங்க அதை எடுத்து காதில் வைத்தவன் அதில் என்ன செய்தி கூறப்பட்டதோ வண்டியை வேக வேகமாக நிமிர்த்தியவன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தான். அவன் மாறன் கதையின் நாயகன் இளமாறன்.
கிளப்பிய வேகத்தில் பறந்து வந்தானோ என்று எண்ணுமளவு 15 நிமிடத்தில் வர வேண்டிய மருத்துவமனைக்கு ஐந்து நிமிடத்திலேயே வந்தவன் அங்கே வாசலிலேயே தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்த தம்பியின் முன் தலை குனிந்தான் .
அவனின் தம்பி ராஜா "உனக்கு எப்போ தான் புத்தி வரப்போதுன்னே தெரிலண்ணே பணம் இல்லன்னா என்கிட்டே கேக்குறதுக்கு உனக்கு என்ன கௌரவக் கொறச்சல் ?எப்பவும் நா உனக்கு தம்பி தான் அதை மனசுல வச்சுக்கோ .பணம் கட்டியாச்சு ஏதோ சைன் கேக்குறாங்க husband தான் போடணும்னு போய் போடு "என்று கறாராக கூற
அவனை நன்றியோடு பார்த்தவன் உள்ளே ஓட்டமும் நடையுமாக செல்ல செவிலியரோ "ஏன் சார் அட்மிட் பண்ணிட்டு அப்டியே போய்ட்டிங்க கொஞ்சமாச்சு அறிவு வேணாமா உங்களுக்கு ?என்ன ஆளோ கையெழுத்து போடுங்க சார் "என்று ஒரு கோப்பை கையில் நீட்டினாள்.
அதில் கையெழுத்திட்டவனின் கைகள் தன்னிச்சையாய் அந்த கோப்பில் பொறிக்கப்பட்டிருந்த தன் சரி பாதியானவளின் பெயரை வருடியது "மிச்சஸ். இலக்கியா இளமாறன் "அவனின் உயிர் .
கை எழுத்திட்ட படிவத்தை அந்த செவிலிப்பெண் உள்ளே எடுத்து சென்றதும் மொத்த சக்தியும் வடிந்ததை போல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவனின் எண்ணமோ கடந்த கால நினைவடுக்குகளுக்குள் செல்ல அவனின் நினைவுகளோடு இனிமையாய் பயணம் செல்வோம் நாமும் .
ஹாய் இது என்னோட புதிய முயற்சி.ஒரு இயல்பான எதார்த்தமான காதல் கதையை கொடுக்கலாம்னு எழுதுறேன் என்னோட முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இதுக்கும் குடுப்பீங்கனு நினைக்குறேன் நன்றி .
விழித்தெழு கண்ணம்மாவை பாதிலேயே நிறுத்துனதுக்கு மன்னிச்சுக்கோங்க நா நெனச்ச மாறி அந்த கதை வரல அதான் நீக்கிட்டேன் .கண்டிப்பா நடுவுல நிறுத்தமாட்டேன் மாறனோடும் இலக்கியாவோடும் இந்த கதையில் பயணிப்போம் ..
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை