13

2.4K 135 46
                                    

திருமண ஏற்பாடுகள் கலை கட்ட அங்கே முக்கால்வாசி வேலைகளை தாமரையும் இலக்கியாவும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர் .தாமரை அவரது கணவனுடன் சென்று வேலைகளை முடிக்க இலக்கியாவிற்கு உதவுவதோ மாறன் தான் .

சங்கரன் வயதின் முதிர்ச்சி காரணமாகவும் தனது வேலை காரணமாகவும் எளிதில் முடிக்க கூடிய வேலைகளையே எடுத்துக்கொண்டார் .மாறனோ விரும்பியே தனது நண்பனின் திருமணத்திற்கு அணைத்து உதவியும் செய்தான் முருகனின் திருமணத்தின் பொழுது முதல் இரண்டு வாரங்களும் மாறனோடு அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொண்டது ராமனும் மோகனும் தானே .மோகனிற்கு அங்கே விடுப்பு கொடுக்காத காரணத்தால் அவன் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னே தான் வருவான் ராமனிற்கும் அவ்விதமே

ராஜா தனது இறுதி தேர்வுகளை முடித்துவிட்டு வந்தவன் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வங்கி கிளெர்க் தேர்விற்காக தீவிரமாக படிக்க ஆரம்பித்தான்.மாறனோன் தந்தைக்கு உடல்நலம் குன்ற ஆரம்பிக்க அவற்றிற்கான மருத்துவ செலவிற்கே அவன் சேர்த்து வைக்கும் முக்கால்பாக பணம் விரயமாக மீதி பணம் கடன் அடைக்கவும் பெட்ரோலுக்கும் சரியாக போனது.

மாறன் இயல்பாகவே பணப்பற்றாக்குறையால் கல்லூரி செல்கையிலும் மூன்று நல்ல நிலையில் இருக்கும் சட்டை pant தான் வைத்திருப்பான் .இப்பொழுதும் இருப்பு தொகை குறைய தனக்கான pant ஷர்ட் எடுக்குமளவு தன் சம்பாத்தியத்தில் தனக்கென அவனால் சேர்க்க முடியவில்லை .

அன்றொரு நாள் திருமண வேலைகளில் ஒன்றான திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கொடுப்பதற்காக மாறன் இலக்கியாவை வெளியே அழைத்து சென்றிருந்தான் .இருவரும் அழைப்பிதழை அச்சடிக்க கொடுத்தவர்கள் திரும்பி வர மாறனோ அவள் பைக்கில் ஏறும்முன் "லயாம்மா இந்தா "என்று அவள் கொடுத்த ஐயாயிரம் ரூபாயை அவளிடம் திருப்பி கொடுக்க அவளோ அவனை கேள்வியாய் பார்த்தவள் அவனின் உடையை பார்த்தாள் அது சற்று மோசமான நிலையில் தான் இருந்தது .

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now