மாறனோ கோபத்தோடு பைக்கை எடுத்துக்கொண்டு சென்றவன் நிற்பாட்டியது தெப்பக்குளத்தில் தான் .
அங்கு இருந்த படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தவனின் மனமோ அங்கு அவன் முன் இருந்த தெளிந்த நீரை போல் அல்லாமல் ஆரவாரமாக ஆர்ப்பரிக்கும் ஆழியினை போல் கொக்கரித்துக்கொண்டிருந்தது .என்ன தவறை செய்தேன் என் வளர்ப்பில் ?எவ்வாறு இப்படி திடீரென்று ஒரு முடிவு ?என்னை ஒரு பொருட்டாக கூடவா நான் வளர்த்த என் மகள் நினைக்கவில்லை .என்று நினைக்கையில் அதீத கோபத்தில் அவனையும் அறியாமல் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது .
இளவரசியோ ராஜாவின் அறைக்குள் வரும் வரை அமைதியாய் இருந்தவள் அடுத்த நிமிடம் அவன் மீதே சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டால் .அவள் அழுகையை எதிர்பார்த்தவன் கதவை தாழிட்டுவிட்டு அவள் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தான் .
இளவரசி "அப்பா.... அப்பா..... என்ன இளவரசினு கூப்டுட்டாங்க.... சின்ன வயசுல இருந்து குட்டிமாவ தவிர்த்து எதுவுமே கூப்பிட மாட்டாங்க... ஏன்.... இப்டி கூப்பிட்டாங்க.... ?நா பண்ணது அவ்ளோ பெரிய தப்பா என்ன வெறுத்துட்டாரா ?இனி பேச மாட்டாரா நைட் ஊட்டி விட மாட்டாரா ?"என்று கேள்வி கேட்டபடி ஏங்கி ஏங்கி அவள் அழ ராஜாவோ யாரை சமாதானப்படுத்துவது என்றே தெரியாமல் குழம்பினான் .
அவள் தலையை வருடியவன் "அரசி அரசி ஒண்ணுமில்லடி கொஞ்சம் கோபம் இருக்கும் தான் ஆனா பேசுவாரு டி "என்க
அவளோ மூக்கை உறுஞ்சியபடி நிமிர்ந்தவள் "பேசுவாருல்ல "என்று கண்களில் வழிந்த கண்ணீருடன் மூக்கு சிவக்க குழந்தை போல் உதட்டை பிதுக்கி கேட்க
அவனோ சிரித்தவன் "கண்டிப்பா பேசுவாரு டி அழாத ப்ளீஸ் "என்க
அவளோ அவன் சட்டையிலேயே மாற்றி மாற்றி தன் முகத்தை தேய்த்தவள் "சரி அழல ஆனா என் மாறப்பா இன்னைக்கு ராத்திரிக்குள்ள என் கிட்ட பேசணும் அது உன் பொறுப்பு "என்றவள் அசால்டாக அங்கிருந்த துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் செல்ல
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை