28

2.6K 138 84
                                    


அவர்கள் வாகனம் தமுக்கம் மைதானத்தை கடக்க சிவாவின் மனமோ நான்கு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை புரட்டி பார்த்தது .அன்று அவனும் அவனது தோழர்கள் மூவரும் சிறிது ஊர் சுற்றிவிட்டு வரலாம் என்று அங்கே சுற்றிக்கொண்டிருந்தனர் .

அப்பொழுது அவனை இடித்துக்கொண்டு ஒருவன் கைப்பையுடன் ஓட ஷிவா "ஏய்ய் அறிவுகெட்டவனே "என்று திட்டியவன் அதன் பின்னே அவன் கைப்பையை பிடிங்கி கொண்டு ஓடுவதை பார்த்தவன் அவனை துரத்த ஆரம்பித்தான்

ஓடிய திருடன் ஒரு கல் தடுக்கி கீழே விழுந்து பையை நழுவவிட அதை அவன் எடுப்பதற்குள் ஷிவா அவனை நெருங்கி விட பையை விட்டு விட்டு ஓடிவிட்டான் அவன் .அந்த பையை எடுத்தவன் யாராவது பின்னால் வருகிறார்களா பையை தேடி என்று நினைத்து திரும்ப அவன் கன்னத்தில் இடியென இறங்கியது ஒரு கரம் .

ஷிவா ஓட துவங்கியதும் என்ன ஏதென்று தெரியாமல் அவனின் நண்பர்களும் அவனை பின்தொடர அங்கே அவர்கள் கண்டா காட்சியோ ஷிவாவை ஒரு பெண் அடிக்கும் காட்சியை தான் .அது மதிய நேரமாதலால் அங்கு அவ்வளவாக கூட்டம் இல்லை .

ஷிவாவோ ஒரு நிமிடம் தனது கன்னத்தில் விழுந்த அறையில் கோபம் தலைக்கேற எதிரில் ஒரு பெண் இருப்பதால் தன் கோபத்தை அடக்கியவன் "எதுக்கு இப்போ அடுச்ச ?"என்று அடிக்குரலில் கோவத்தை வெளிக்காட்டி உரும

அவளோ அவனிற்கு சளைக்காமல் எதிர்த்து நின்றவள் "பைய புடுங்கிட்டு போன திருடன் நீ உன்ன அடிக்காம கொஞ்சுவாங்களா ?"என்க

அவள் கூறிய திருடன் என்ற வார்த்தையில் கொதித்தவன் "ஏய்ய் யாரை பாத்து திருடன்னு சொல்ற "என்க

அவளோ "உன்ன தான்டா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு இதே ஷர்ட் தான் "என்க அப்பொழுது தான் ஷிவா கவனித்தான் தான் அந்த திருடன் இட்டதை போன்ற நிறத்திலேயே சட்டை அணிந்திருப்பதை .

அதற்குள் பதட்டமாய் ஓடிவந்த இன்னொரு பெண் "அடியேய் அவசரக்குடிக்க இவன் இல்லடி அது "என்க

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now