நாட்களும் நகர மேகலா மாமியாரிடம் மாமனாரிடமும் முகம் சுழிக்காமல் நல்விதமாகவே நடந்து கொண்டால்.ராஜாவிற்கே அது ஆச்சர்யம் தான் தான் நினைத்ததற்கு மாறாய் அண்ணியார் இருப்பதை கண்டு .
எனில் மேகலாவுக்கு தனியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறைந்ததா என்றால் அது தான் இல்லை .அதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டு தான் இருந்தால்.எனில் புகுந்த வீட்டின் உறவுகளையும் நேசிக்கவே துவங்கி இருந்தாள்.
தம்பி அண்ணன் இல்லாது வளர்ந்தவளிற்கு மாறனும் ராஜாவும் தம்பிகளாகவே தோன்றினார்கள் அதிலும் துரு துருவென்று பேசும் ராஜா அவளிற்கு செல்ல பிள்ளை என்றே சொல்லலாம் .
இதோடு முருகன் மேகலாவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது .வந்ததில் இருந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றாள் .முருகனிற்கு மட்டும் அவ்வப்போது முட்டை மற்ற பலகாரங்கள் செய்து கொடுக்கும் ஷாந்தி மாறனையும் ராஜாயும் கவனிக்காமல் விடுவதையும் மாறன் வெளியே செல்கிறேன் என்ற பெயரில் காலையில் தம்பியுடன் செல்பவன் மாலை நேரம் கழித்தே களைப்போடு வருவதையும் என்ன என்று கேட்ட போது கூற மறுத்துவிட்டனர் .பின் ஒரு நாள் கோயிலிற்கு செல்லலாம் என்று வந்தவள் அப்போதே கவனித்தாள் ராஜா ஒரு மளிகை கடையில் பொட்டலம் கட்டுவதையும் மாறன் அங்கே கணக்கு எழுதுவதையும் .
படிக்கும் பிள்ளைகள் எதற்காக இவ்வாறு வேலை செய்கிறார்கள் முருகன் செலவிற்கு பணம் கொடுக்கிறான் தானா என்ற ஐயம் எழுந்து விட பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் வீட்டிற்கு வந்துவிட்டாள்.அங்கே ஷாந்தி முருகனிற்கும் அவளிற்கும் மட்டும் ஆட்டுக்கறி செய்து எடுத்து வைத்தபடி இருக்க மேகலா "அத்த எல்லாத்தையும் எங்களுக்கே வச்சுட்டா பசங்க என்ன சாப்பிடுவாங்க ?"என்க
சாந்தியோ "வெட்டிப்பயலுகளுக்கு எதுக்கும்மா இதெல்லாம் நீங்க சாப்பிடுங்க இவனுங்களுக்கு சாம்பாரும் வடகமும் இருக்கு "என்க
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை