வருடங்கள் சென்றது மாறன் தனது படிப்பை முடித்து விட்டு மதுரையிலேயே ஒரு பால் பண்ணையில் வேலைக்கு அமர்ந்திருந்தான் தற்காலிகமாக .
ராமனும் மிலிட்ரிக்கு சென்று விட வருடம் ஒரு முறை பத்து நாட்களுக்கு தான் ஊரிற்கு வருவான் .பணம் அனுப்புவது மட்டுமே அவனால் செய்ய முடிந்தது . மோகன் வட மாநிலத்தில் ஒரு வேலைக்கு சென்று விட்டான் . நன்றாக படிக்கும் இலக்கியாவிற்கோ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து ரெசல்ட்டும் வந்திருந்தது ஆயிரத்து இருபது மதிப்பெண்கள் பெற்றிருந்தால் .அடுத்து என்ன செய்வதென்று அவளிற்கு துளியும் தெரியவில்லை அப்படியே அவள் நாட்களை கடத்திக்கொண்டிருக்க அவளின் அன்னையோ சௌபாக்கியலக்ஷ்மியை போல் பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு type writing கற்றுக்கொண்டு வேலைக்கு செல்ல கூறிக்கொண்டிருந்தார் வீட்டின் வறுமை நிலை சற்று குறையுமென்று எனில் அவளிற்கு அதில் துளியும் விருப்பமில்லை .
வீட்டில் சும்மாய் இருக்க பிடிக்காமல் மாலை நேரத்தில் அந்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு பாடம் சொல்லி கொடுப்பாள் .அப்படி ஒருநாள் அவள் பாடம் சொல்லி கொடுத்து முடித்திருக்க பிள்ளைகள் அனைவரும் விடை பெற்று சென்றிருந்தனர் .
வாசலில் அமர்ந்து பாசியினை வைத்து அவள் கைவினை பொருள் செய்துகொண்டிருக்க அவளின் தந்தை வர பின்னோடே மாறனும் வந்துகொண்டிருந்தான் .
தன் தந்தையை கண்டு புன்னகைத்தவள் மாறனை கண்டு பெரிதாய் புன்னகைத்தாள் .
தந்தையிடமிருந்து பையை வாங்கியவள் "ஹே இப்போ தான் வீட்டுக்கு வழி தெருஞ்சுதா உனக்கு உன் frienduh வந்தா தான் வீட்டுக்கு வருவியா ?"என்கமாறனோ சிறு சிரிப்போடு "அப்டிலாம் இல்லமா கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதன் இந்த பக்கம் வர முடியல "என்க
அவளின் தந்தையோ "இலக்கியா வாசலிலேயே வச்சு தான் பேசணுமா உள்ள கூட்டிட்டு போய் எதாச்சு சாப்பிட குடும்மா எனக்கு கொஞ்சம் பக்கத்துல வேலை இருக்கு நா போய் முடுச்சுட்டு வரேன் "என்று சென்று விட
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை