தன தந்தை கூறிய வாக்கியத்தை முழுதாய் உணர்ந்துகொள்ளவே அவனிற்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது .அவரை அடிபட்ட பார்வை ஒன்று பார்த்தவன் "என் குட்டிமாவ நா என் பொண்ணா நெனச்சு தானப்ப தூக்குவேன் ,கொஞ்சுவேன் அவளை தோளுல வச்சுக்கிட்டே சுத்துவேன் அது எப்படிப்பா உங்களுக்கு வேற மாறி தோணுச்சு ?"என்று அவன் கேட்கையிலேயே குரல் கம்மி விட கண்களில் லேசாய் கண்ணீரும் கோர்த்திருந்தது .
தனது தந்தை அன்பை ஒற்றை நொடியில் கொச்சை படுத்தி விட்டார்களே என்று .அவரோ குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தவாறு "மன்னிச்சுருப்பா"என்க அவனோ சற்று நேரம் இறுகி போய் அமர்ந்திருந்தான் .
அதன் பின் ஒருமுடிவெடுத்தவனாய் நிமிர்ந்தவன் "அப்பா இன்னும் 2 நாளுல குட்டிமாவுக்கு விஷேஷம் இருக்குல்ல "என்று கேட்க அவரோ மகனை புரியாத ஒரு பார்வை பார்த்தார் .பின் "ஆமாப்பா என் கேக்குற "என்க அவனோ ஒன்றுமில்லை என்று தலை அசைத்தவன் "சொல்றேன்பா "என்று கூறிக்கொண்டவன் மனதில் எல்லாத்துக்கும் அன்னைக்கே முடிவு கட்டுறேன் என்று நினைத்துக்கொண்டான் .
இரண்டு நாட்கள் அதன் போக்கில் செல்ல அன்று மாலை அவர்களின் வீட்டு வரவேற்பறையில் சொந்தங்கள் சிலரும் சுற்றத்தார் சிலருமென ஒரு முப்பது பேர் கூடி இருக்க மாறனின் கண்களோ வாசலையே நொடிக்கொருமுறை தொட்டு திரும்பியது .
அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் இலக்கியாவின் குடும்பத்தார் வந்து விட மாறனின் கண்களோ தான் வாங்கி கொடுத்த மயில் கழுத்து நிற பட்டுப்புடவையை மை இட்ட கண்களோடு உதட்டு சாயமே இல்லாமல் சிவந்த உதடுகள் அவனை கண்ட நொடி செம்மலரென விரிய மல்லிகை சரங்கள் தோள் தொட்டு உறவாட வந்துகொண்டிருந்த தன்னவளையே அளவெடுத்துக்கொண்டிருக்க
அவளோ முதல் முதலாய் வேட்டி சட்டையில் சிரிக்கையில் மெலிதாய் விழும் கன்னக்குழியில் அலை அலையாய் புரண்ட கேசத்தை ஒற்றைக்கையால் கோதிவிட்டுக்கொண்டு மாநிறத்தில் ஆண்மையின் இலக்கணமாய் நின்றவனை ரசித்துப்பார்த்தவள் அவனின் பார்வையை கண்டு வெட்கம் வர தலையை தொங்கப்போட்டுக்கொண்டாள்
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை