௧௦. மன்னிப்பாயா

1.6K 86 17
                                    

"ரியா.. நில்லு.. ஓடாத.." எனத் தத்தி தத்தி ஓடும் சிறிய வாண்டை, துரத்தியப் படி வந்த ரவியின் குரல் கேட்டு மூவரும் திரும்பினார்கள்.

"ஆரு.." எனத் தன் மழலை மொழியில், தன் கரங்களை விரித்துக்கொண்டு தன்னை நோக்கி வந்தவளை அல்லி அணைத்துக்கொண்டான் ஆரவ்.

"டேய் ஷப்பா முடியல டா.. துருவ்.. உன் பொண்ணு உன்னை மாதிரியே இருக்கா‌.." என அலுத்தப்படிக் கூறிய ரவியைப் பார்த்து முறைத்தவன்,

"டேய் அவளை ஹாஸ்பிடல் உள்ள எல்லாம் கூட்டிட்டு வர வேண்டாம்னு சொல்லித் தானே கொஞ்ச நேரம் பார்த்துக்கோனு உன் கிட்ட வெளியிலயே விட்டுட்டு வந்தேன். ஏன் டா உள்ளக் கூட்டிட்டு வந்த?" என்றான் துருவ்.

"நான் என்ன டா பண்ண? அப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறா. என்னமோ நான் குழந்தையக் கடத்திட்டு வந்துட்டதுப்போல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க. இப்போ பாரு கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணியக் காணோம்." எனச் செல்லமாய் அவளது தலையில் கொட்டியவனைத் தன் கைகளை விசிரி அவள் அடிக்கப்பார்க்க பாவம் அவளின் பிஞ்சு கைகள் அதற்கு எட்டவில்லை.

அவளின் வலக்கையைத் தன் உள்ளங்கைக்குள் அடக்கிக்கொண்ட ஆரவ் "டிஷ்க்காஆஆல்.." என வாயால் சத்தம் செய்து, ரவியின் கண்ணத்தில் லேசாய் ஒருக் குத்து விட்டான். அது வலித்ததுப் போல் நடித்த ரவியைக் கண்டு, தான் அவனை வீழ்த்தி விட்டதாய் எண்ணி, வாய்பொத்தி கொலுசு மணி சிதறுவதுப் போல் அழகாய் சிரித்தாள் ரியா.

"சரி ரியுக் குட்டி இப்போ அம்மாக் கிட்ட போங்கப் பார்ப்போம். அம்மா உனக்கு நிறையா சாக்கி வாங்கி வச்சிற்காங்களாம். ஆமாத் தானே ப்ரியா?" என ப்ரியாவை ஆரவ் கேள்வியாய் நோக்க, அதேப் போல் ரியாவும் தன் அன்னையைப் பார்த்தாள்.

"ஹ்ம்ம் ஆமா. இவ்ளோ சாக்கிஸ் வச்சிற்கேன்." எனத் தன் கைகளைக் குறிப்பிட்ட அளவு விரித்துக் காட்டினாள் ப்ரியா.

"அது வேணா. இவ்ளோஓ வேணு." என்றாள் ரியாத் தன் கைகள் இரண்டையும் தன்னால் இயன்ற வரை விரித்தப்படி.

விண்மீன் விழியில்..Where stories live. Discover now