21. முகவரியில் முதல் வலி

1.2K 72 25
                                    

வீட்டில் வெகு நாள் கழித்து காலடி எடுத்து வைத்த ஆரவின் பாட்டி தேவிக்கு, இன்னும் மருத்துவமனையின் வாசம் நாசியை விட்டு மறையாததுப் போலிருக்க,
"சுமித்ரா நான் என் ரூம்க்குப் போறேன். முதல்ல குளிச்சிட்டு துணிய மாத்துனா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்." என தளர்வான குரலில் தன் மருமகளிடம் கூற,

"மத்தியான சாப்பாட்டுக்கு நேரமாகிடுச்சி அத்தை. சாப்ட்டு மாத்திரை போட்டுட்டு போங்களேன்." என்றார் ஆரவ் அன்னை சுமித்ரா மறுப்பாய்.

"இல்லை இல்லை. எனக்கு இன்னும் அந்த ஆஸ்பத்திரி வாசனை அடிக்குது. எனக்கு இதோட சாப்பிட பிடிக்கலை. நான் போய் குளிச்சிட்டு வரேன்." என்க,

"சரி.. நீங்க வர வேண்டாம். நானே உங்க ரூம்க்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்." என சுமித்ரா சொல்லவும் தலையசைத்தவர்,

"எங்க பசங்க.. வேற யாரையும் காணோம். எத்தனை நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துருக்கேன். என்னை வரவேற்கணும்னு கூட யாருக்கும் தோணலை பத்தியா?" என நொந்துக்கொள்ள,

"யாருக்கும் நீங்க வந்திட்டிங்கனு தெரிஞ்சிருக்காது அத்தை. நீங்க போங்க. நான் எல்லாரையும் வர சொல்றேன்." என்றப்படி அனுப்பி வைத்தார்.

கீழ் தளத்திலேயே இருந்த தன் அறைக்குள் நுழைந்த தேவி, இருட்டாய் இருப்பதைக் கண்டு மின்விளக்கு எரிய வைக்கும் சொடுக்கியை கையால் சுவரில் தேடயப்படி ஒருவழியாய் அதை கண்டு பிடித்து அழுத்தவும், அதில் தோன்றிய வெளிச்சத்தில் அறை எங்கும் சுழ்ந்திருந்த வண்ண வண்ண காகிதங்களையும், பலூன்கலும் அவர் கண்ணில் பட்ட நொடி,

"ஹாப்பி பர்த்டே டார்லிங்.." என்றக் குரலோடு அவர் தலைமேலே ஒரு பலூன் உடைந்து ஜிகினாவில் அவரை நனையச்செய்ய, அவரோ அதை பொருட்படுத்தாமல் நீர் ததும்பிய விழிகளோடு அந்த குரலுக்கு சொந்தமானவனின் புறம் திரும்ப, அங்கோ கையில் கேக்குடனும் முகம் நிறைந்த புன்னகையுடனும் ஆரவ் நின்றுக்கொண்டிருந்தான்.

அவனை அடுத்து அங்கிருந்த அனைவரும் "ஹாப்பி பர்த்டே டூ யூ.. ஹாப்பி பர்த்டே டூ யூ. மே காட் ப்ளஸ் டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ டியர் பாட்டி. ஹாப்பி பர்த்டே டூ யூ.." எனக் கோரஸாய் பாடவும், அவரது கண்கள் ஆனந்த கண்ணீருடன் அங்கிருந்த அனைவரையும் அலச, முதலில் அர்ஜுனில் தொடங்கி, ப்ரீயா, தன் மகன் ராகவ், ரேணுகா, மகள் அனன்யா, ஆதிரா, கடைசியாய் மாயா அவளின் மேல் விழ, சட்டென அவரது பார்வை குதித்து ஆரவிடம் திரும்பி வந்தது.

விண்மீன் விழியில்..Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ