24. முடுச்சுகளின் ஆரம்பம்

1.1K 74 32
                                    

"இங்க மாயா இடத்துல யார் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனா ஒன்னு தெரியும். மாயா செத்துட்டா! அவளை என் கையாலே நான் உயிரோட எரிச்சுருக்கேன்." என ஆதிரா கூறிக்கொண்டிருக்கும் போதே அறை வாசலில் இருந்து ராகவின் இரும்பல் சத்தம் கேட்கவும் தாயும் மகளும் திடுக்கிட்டு திரும்பினர்.

"அண்ணா எப்போ வந்திங்க?" என வார்த்தைகள் குழறக் கேட்ட அனன்யாவை ஒரு மார்க்கமாய் பார்த்தவர்,

"ஏன் என்னாச்சி? ஏன் இரண்டு பேரும் என்னை அப்படி பார்க்குறிங்க?" என்றார் முகத்தில் குழப்ப ரேகையுடன்.

அவரது அந்த கேள்வியிலேயே அவர் எதையும் கேட்கவில்லை என தெரிந்து விடவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பெரு மூச்சுவிட்டுக்கொள்ள,
உள்ளே நுழைந்த ராகவ், அவர்களை சந்தேகமாய் நோக்கி, "என்னமோ சரியில்லை. எதாவது வில்லங்கம் பண்றிங்களா?" என்றப்படி அவர்கள் அருகில் அமர்ந்தார்.

உடனே எழுந்தமர்ந்த ஆதிரா, "நாங்க என்ன மாமா வில்லங்கம் பண்ண போறோம்? எங்க வாழ்க்கைல இருக்க பிரச்சினை பார்க்கவே எங்களுக்கு நேரம் பத்தலை." என்றாள் சாதரணமாய்.

"சரி நம்புறேன். அப்புறம் எப்படி உன் ரூம்ல நெருப்பு பிடிச்சது? நல்ல வேலை வெளில மழை பேஞ்சிட்டு இருந்தனால நெருப்பு ரொம்ப பரவலை." எனக் கூற, என்ன பதில் சொல்வது என அறியாமல் ஒரு நொடி யோசித்தவள் பின் இழுத்து,

"அது கேன்டல் கர்டன்ல விழுந்துடுச்சு மாமா." என்றாள்.

"அது எப்படி விழும்? அவ்வளவு கேர்லஸாவா நீ இருந்த?" என அவர் கடுமையாய் கேட்க,

"இல்லை மாமா ஜன்னல் வேற திறந்திருந்ததா காத்துல ஆடி விழுந்துருக்கும்னு நினைக்கிறேன்." என்றாள் தன் விரல்களில் பார்வைப்பதித்தப்படி குனிந்து கொண்டு.

"நான் அப்பவே சொன்னேன். ஒரு ரூம்க்கு எதுக்கு இவ்வளவு கர்டைன்ஸ்னு? நீ கேட்கவே இல்லை. இதுக்கு தான் பெரியவங்க எதாவது சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்ன்னு நினைச்சி கேட்டுக்கனும்ங்குறது." என அவர் கூறவும் அவள் பதில் பேசாமல் ஊமையாய் அமர்ந்திருந்தாள்.

விண்மீன் விழியில்..Wo Geschichten leben. Entdecke jetzt