ஆரவ் தன் கோபத்தின் வீரியம் அறிந்து எப்பொழுதும் அதைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவன்.
ஆனால் அவனதுக் கோபம் அவனது கட்டுப்பாட்டை மீறி விட்டால், இந்த அளவு அந்த அளவு என்றெல்லாம் இல்லை. கண்ணாப்பின்னாவென்று வரும். உதாரணத்திற்கு அவன் என்னப் பேசுகிறான்? யாரிடம் பேசுகிறான்? என்ன செய்கிறான்? என்று எதுவும் அவனுக்குத் தெரியாது.
ஆரவின் இந்த இன்னொரு முகத்தை ரவிப் பார்த்ததே இல்லை என்பதால் அவன் சற்று எச்சரிக்கையாய் இல்லாமல் இருந்து விட்டான். அவன் கோபத்தில் இப்படிப்பட்ட முட்டாள் தனமானச் செயலைச் செய்வான் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை .
"இப்போப் பாக்குறேன்.. இந்தக் கல்யாணம் எப்படி நடக்குதுனு.." எனக் கூறியவன் யோசிக்காமல் சட்டெனக் கையிலிருந்தக் கத்தியைத் தன் மணிக்கட்டில் அழுந்த உரசினான்.
இரத்தம் வெளியேறி, அவனது விரல்கள் வழி வழிந்துத் தரையில் சொட்டு சொட்டாய் விழ, "இப்போவும் கூப்பிடு. உனக்கு யார் செத்தா என்னக் கவலை. நான் செத்தாலும் கவலை இருக்காது. உன் தங்கச்சிப் பொண்ணுக்கு வந்துத் தாலிக் கட்டிட்டு சாவுரேன் வா.." எனச் சொறுகியக் கண்களோடு கோபம் கலந்தக் குரலில் அழுத்தம் குறையாமல் கூறியவனைத் தாங்கிப்பிடித்த ரவி, "டாக்டர்.." என்றழைக்க பிரம்மைப் பிடித்ததுப் போல் நின்றுக் கொண்டு இருந்த ராகவ் ஆதித்தியன் ஆரவ் சரிந்து விழவும் முதல் முறையாய் தன் மகன் என்றப் பாசம் எட்டிப்பார்த்தது.
ஒரு வித உணர்ச்சியற்ற நிலையில் அவனை ரவியோடுச் சேர்ந்துத் தாங்கிப்பிடித்து இரும்பு நாற்காலியில் அமர வைத்தவருக்கு அப்போது தான் தவறு செய்து விட்டோம் என உரைக்க, பிரம்மைப்பிடித்த நிலையில் இருந்தவர், இரத்தம் வழியும் கையுடன் மயங்கிக் கிடக்கும் தன் மகனையும் பார்த்து கண்ணில் நீர் சுரத்தது.
அடுத்த வினாடிகளில் ஆரவை ஸ்ட்ரெச்சரில் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்ல, அவரது நிலையைக் கண்ட ரவி, அவரை அமர வைத்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்துக் குடுக்கவும் உணர்ச்சியற்று அதை மறுக்காமல் அருந்தியவர், க்லாஸை அதேப் போல் ரவியிடம் நீட்டவும் அதை வாங்கிக்கொண்டவன், அவரது அலைப்பேசித் தொடர்ச்சியாய் அடித்துக்கொண்டே இருப்பதைக் கண்டு, "அங்கிள் போன் அடிக்குது." என்றான். அவர் அசையாமல் இருக்கவும், அவரின் தோளை லேசாய் அழுத்தக் கனவிலிருந்து எழுந்தவர் போல் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவரிடம் "அங்கிள் போன்.." என்றான் மீண்டும்.