43. இருவரின் முடிவு

1.1K 61 15
                                    

"அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உனக்கே தெரியும். ஹாஸ்பிடல் போற வழியில தான் உங்க இரண்டு பேருக்கும் ஆக்சிடன்ட் நடந்திருக்கு."

"அ.. அப்புறம் ஆதிராக்கு என்ன ஆச்சி?"

"அவளை.. அவளை ஆதிரா உயிரோட எரிச்சி கொன்னுட்டா.." குரல் நடுங்க சொன்னவன், 
"இ.. இது எல்லாத்தையும் என்கிட்ட சொன்னது ஆதர்ஷ் தான். உங்கப்பா ஃபோன்ல ரெக்கார்ட் பண்ண வீடியோ உள்ள உண்மையான மெமரிகார்ட் தான் முதல்ல உன் செயின்ல இருந்துருக்கு. அது ஆதிரா கைக்கு கிடைச்சு, இந்த மெமரி கார்ட் மூலமா ஆதர்ஷ்க்கும் நடந்த உண்மை தெரிஞ்சிருக்கு. ஆனா அது எப்படி உன் செயின்ல வந்ததுன்னு எனக்கு தெரியலை." கண்ணீர் மல்க ஆரவ் சொல்லி முடிக்க,

"அதை என் அப்பா தான் வச்சிருக்கனும்." என எங்கோ வெறித்தப்படி கூறினாள் மாயா. 

"அப்போ அதைத் தான் ஆதிரா மாத்தி அந்த இரண்டு புட்டேஜை வச்சிருந்திருக்கா. ஆனா அந்த உண்மையான மெமரி கார்ட் ஆதர்ஷ்கிட்ட இருந்ததால தான் இப்போ அது நமக்கு கிடைச்சிருக்கு." ஆரவ் சொல்ல, கேட்டுக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள் மாயா.
கண்கள் இரண்டும் வறண்டு போய் இருந்தது.

தன் வாழ்க்கையில் நடந்தவை, அனைத்தும் கண் முன்னால் நிழற்படமென ஓட, ஒரு நொடி ஆழ்மூச்சொன்று இழுத்துவிட்டவளாய் அனைத்தையும் கலைத்தவள், ஒருப்பக்கமாய் தோளில் படர்ந்திருந்த கூந்தலை இழுத்து வளைத்து கொண்டையாய் முடிந்துக்கொண்டு எழப்போனவளை கரம் பிடித்து தடுத்தான் ஆரவ்.

"எதாவது சொல்லு.." என கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டவனை உணர்வற்ற ஒருப்பார்வை பார்த்து விட்டு அவனது கரத்தை தன் கையிலிருந்து பிரித்தவள் நிதானமாய் எழுந்து, திரும்பி நடக்கத்தொடங்கினாள்.

அவளது இந்த அமைதியே பல வித அர்த்தத்தை சொல்லி ஆரவின் மனதை குத்திக் கிழிப்பது போல் இருந்தது அவனுக்கு.

தனதறைக்குச் சென்று, கதவை உள்ளே தாழ்போட்டவள் அப்படியே கதவில் சரிந்து அமர்ந்தாள்.

விண்மீன் விழியில்..Donde viven las historias. Descúbrelo ahora