18. காதலற்ற கண்கள்

1.2K 75 12
                                    

"அவர் எதையும் பறிச்சிடலைனு சொன்னில மாயா. அது உண்மையில்ல.." என்றவனை புரியாமல் குழப்பத்துடன் பார்த்தவள்,

"அவருப் பார்க்க எவ்ளோ நல்லவரா இருக்காரு ஆரவ். கண்டிப்பா அவர் ரொம்பப் பெரியக் கெட்டதுலாம் பண்ணி இருக்க மாட்டாரு. அப்படி என்ன உன்கிட்ட இருந்துப் பறிச்சிட்டாரு?" என்ற அவளின் சொற்களைக் கேட்டவனது முகம் சட்டென மாறியது.

யோசனையில் இருந்தவனிடம், "சொல்லு என்னப் பறிச்சாரு?" என்றாள் மீண்டும்.

"அது.." தயங்கினான் அவன்.

"அது?" என அவள் அதே பாணியில் கேட்க, தன் எண்ணத்தை மாற்றியவன் அவளின் மனதையும் அவர் மேல் அவள் வைத்த நம்பிக்கையையும் உடைக்க விரும்பாமல், பேச்சை மாற்றும் விதமாய், சட்டென வார்த்தைகளைக் கோர்த்து,

"காதலை.. " என்றான். பின் ஒரு பெருமூச்சை விட்டு அவள் கண்களை உற்று நோக்கி மீண்டும் பேசினான்.

"இந்தக் கண்ல தெரிஞ்ச எனக்கான காதலை அவருப் பறிச்சிட்டாரு மாயா.
உன் மனசுல இருந்து மட்டுமில்ல, உன் நினைவுகள்ள இருந்தும் என்னை அழிச்சிட்டாரே. நான் அழிய அவருத் தானேக் காரணம்." என்றான் உடைந்தக் குரலில் திக்கித் திணறி.

இதுவும் அவனால் சொல்லப்படாத ஒரு உண்மைத்தான். மாயாவின் விழிகள் இயற்கையிலேயே மிகவும் அழகாய் இருக்கும். அவள் பேசும் போது அவளின் அடர்த்தியான, நீளமான இமை முடிகள் மூடுவதும் திறப்பதும் பார்த்துக்கொண்டே இருந்தால் சுற்றியுள்ள உலகமே மறந்து விடும் ஆரவிற்கு. எத்தனைக் கூட்டத்திலும் அவள் விழிகள் மட்டும் தனியாய் ஜொலிப்பதுப் போன்றுத் தோன்றும் அவனுக்கு‌.

அத்தனை அழகான விழிகளில் தெரியும் காதல் அவனுக்கானது என்னும் உண்மை அவனுக்கு எப்பொழுதும் ஒருக் கர்வத்தையேத் தந்திருக்கிறது. ஆனால் தன் தந்தையால் அந்தக் காதல் இல்லாமலேயேப் போனது அவனால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் கண்களின் காதலின்மையால் அவள் விழிகளின் அழகே குறைந்து விட்டது போன்று இருந்தது.

விண்மீன் விழியில்..Where stories live. Discover now