37. குறும்படம்

1K 61 20
                                    

அன்று நடந்ததை முழுவதும் ஆரவ் சொல்லி முடிக்க,

"இவ்வளவு நடந்துருக்கா?" என வியந்த ரவி,

"ஆனா அந்த ட்ராயிங் பத்தி எதுவுமே அவர் சொல்லலையே. நீ கேட்டியா இல்லையா?"

"ம்ம் கேட்டேன். அது முரளி அங்கிள் சென்னை விட்டு போகும் போது ஒரு நியாபகமா வினை மாமா குடுத்த கிஃப்ட். மாயா நாலு வயசு இருக்கும் போது கேரளா போனாள.. அப்போ தாராவோட பிக்ச்சர் எதுவுமே தன்கிட்ட இல்லைனு சொல்லி அந்த ட்ராயிங்ல தாரா இருந்த ஒருப்பக்கத்தை மட்டும் கிழிச்சி எடுத்துக்கிட்டா. அவ இருந்த இன்னொரு பாதியை மட்டும் திரும்ப தாரா கிட்டயே குடுத்துட்டதா சொன்னார்."

"ஓஹ்ஹ்.. அப்புறம் அங்கிள் சொன்ன கதிர் அவரை நீ பார்த்தியா?"

"பார்த்தேன் டா. அவன் சரியான பைத்தியமா இருக்கான். அவன் எண்ணமெல்லாம் தாரா பத்தி நான் ஏன் இன்னும் மாயாகிட்ட சொல்லலைங்குறதா தான் இருக்கு. தாராக்கு என்னாச்சி ஏதாச்சிங்குறது தெரியாம நான் எப்படி டா இதை அவ கிட்ட சொல்றது. ஒருப்பக்கம்‌ மறைக்கவும் சங்கடமா இருக்கு. அவ ஆல்ரெடி ஆதிரா இறந்த விஷயத்துலேயே ரொம்ப அப்செட்டா இருக்கா. எனக்கு என்ன பண்ணனுன்னு தெரியலை." 

"நீ‌ ரொம்ப குழப்பிக்காதடா. சீக்கிரம் தாராக்கு என்ன ஆச்சின்னு கண்டுப்பிடிச்சடலாம். அதுவரை அந்த கதிர் மாயா கிட்ட எதுவும் சொல்லாம இருந்தா சரி தான்." என்றவன்,

"சரி இப்போ என்ன தான் பண்ணலாம்னு இருக்க?" என கேட்க,

"தெரியலை மச்சான். மாயாவுக்கு சொந்தம்னு சொல்லிக்க இப்ப இருக்குறது அவங்க மட்டும் தான். அவங்களை எப்படியாவது கண்டு பிடிச்சே ஆகனும்."

"ஆனா எப்படி? உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாள் சென்னைக்கு கிளம்பி வந்த பொண்ணு, அப்புறம் எங்கன்னே தெரியலையே."

"ஒருவேளை அவ மாயா வீட்டுக்கு போயிருந்தா, கண்டிப்பா அவளை பத்தி மாயாவுக்கும் வினை அங்கிள்க்கும் தெரிஞ்சிருக்கும். ஆனா வினை அங்கிள் இப்போ இல்லை. மாயாவுக்கும் பழசு எதுவும் நியாபகம் இல்லை."

விண்மீன் விழியில்..Wo Geschichten leben. Entdecke jetzt